செல்லம்மா சீரியலிலிருந்து நீக்கப்பட்ட அர்ணவ்... புதிய ஹீரோ இவர் தானாம்!!
சென்னை: செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த அர்ணவ் நீக்கப்பட்டு இருக்கிறார்.
குடும்ப பிரச்சனை காரணமாக அர்ணவ் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக புதிய கதாநாயகன் சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.
அர்ணவ் நடித்த கேரக்டரில் இனி அவருக்கு பதிலாக திலீப் ஆர் செட்டி என்ற தெலுங்கு சீரியல் நடிகர் நடிக்க இருக்கிறாராம்.

தமிழ் சீரியல் நடிகர்
சமூக வலைத்தளத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அர்ணவ் அவர் நடித்து வந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. சின்னத்திரை நடிகர் அர்ணவ் கல்யாணப்பரிசு, சக்தி, கேளடி கண்மணி என பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் .தற்போது செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் இவரோடு கேளடி கண்மணி சீரியலில் நடித்த திவ்யா ஸ்ரீதர் என்பவரை காதலித்து திருமணம் செய்ததாக செய்திகள் வந்தது.

மனைவி கொடுத்த கம்ப்ளைன்ட்
அர்ணவ் மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களுடைய திருமண செய்தியை அறிவித்திருந்தார். அடுத்த ஒரு சில நாட்களிலே அந்தப் புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்து விட்டார் .பின்பு ஒரு சில வாரங்களில் கர்ப்பமாக இருக்கும் செய்தியும் அறிவித்து இருந்தார். ஆனால் அர்ணவ் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் கூறாமல் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் திவ்யா தன்னுடைய கணவரான அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்.

போலீஸ் ஸ்டேஷனில் கதாநாயகன்
காவல்துறை அழைத்த பிறகும் அர்ணவ் விசாரணைக்கு செல்லாமல் தான் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்லம்மா சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் அர்ணவ் திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறார் .இந்த நிலையில் அவர் 15 நாட்கள் காவலில் காதலில் காவல்துறை எடுத்து இருக்கிறது. அதனால் சீரியலிலிருந்து அவரை நீக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இனி இவர்தான் கதாநாயகன்
அர்ணவ் செல்லமா சீரியலில் இருந்து விலகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக திலீப் ஆர் செட்டி என்பவர் நடிக்க இருக்கிறாராம். அவர் ஏற்கனவே கிருஷ்ண துளசி எனும் தெலுங்கு சீரியலில் நடித்தவராம். தற்போது புது முகமாக இனி அவர்தான் செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.












Click it and Unblock the Notifications