நீ பேசுறதே போலீஸ் கிட்டதான்.. நிஜ போலீஸுக்கு கால் செய்து வசமாக சிக்கிய டம்மி போலீஸ்.. எங்கனு பாருங்க
திருவனந்தபுரம்: போலீஸ் போல வேடமிட்டு வீடியோ கால் மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி நபர் ஒருவர், கேரளா, திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்து வசமாக சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுப்புது ரூட்டுகளில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. யாரு சாமி நீங்கெல்லாம் என்று கேட்கும் அளவுக்கு டிசைன் டிசைனாக பணம் பறிக்கின்றனர். சமீபகாலமாக உங்களுக்கு பெயரில் கொரியர் வந்திருக்கு. அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள், பாஸ்போர்ட் உள்ளது என்று மிரட்டுவதும், போலீஸ் பேசுவதாகக் கூறி மோசடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்று கூறி மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

தொலைபேசியில் அழைக்கும் நபர்கள் முதலில் போலீஸ் போல பேசி மிரட்டி பின்னர் வீடியோ காலில் வரச் செய்து டிஜிட்டல் அரெஸ்ட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், தங்களது தகவல்கள், பணம் போன்றவற்றை அனுப்பக் கூடாது என்றும் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸார் கூறி வருகின்றனர்.
ஆனாலும், பொதுமக்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில், சைபர் கிரைம் போலீஸ் ஒருவருக்கே டிஜிட்டல் அரெஸ்ட் கும்பல் ஒன்று வீடியோ கால் செய்து மோசடி செய்ய முயன்று வசமாக சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சைபர் கிரைம் போலீஸுக்கு தவறுதலாக அழைத்த அந்த மோசடி நபர், போலீஸ் ஸ்டேஷன் போல செட் செய்யப்பட்டுள்ள ஓரிடத்தில் போலீஸ் போல வேடமிட்டு அமர்ந்து கொண்டு பேசுகிறார். தங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போவதாகவும் கூறி மிரட்டுகிறார். தன்னிடம் பேசுவது போலி போலீஸ் என்று தெரிந்துகொண்ட அந்த சைபர் கிரைம் அதிகாரி நீ பேசிக் கொண்டிருப்பதே திருச்சூர் சைபர் கிரைம் போலீஸிடம் தான் என்று கூறுகிறார்.
பின்னர், உனது லொக்கேஷன், முகவரியை எல்லாம் நாங்கள் டிராக் செய்துவிட்டோம் என்று நிஜ போலீஸ் கூறியதும் அந்த மோசடி நபர் பயந்து வேர்த்து பூத்துப் போகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications