அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு ஜூஸில் விஷம் கொடுத்த காதலி.. ஜோதிடம் அல்ல.. மேட்டரே வேறயாம்
திருவனந்தபுரம்: கன்னியாகுமரி - கேரள எல்லையில் வயிற்று வலியால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த இளைஞரின் காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், ஒன்றாக சுற்றிய வீடியோக்களை வருங்கால கணவருக்கு அனுப்பி விடலாம் என பயந்து காதலனை குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்து காதலி கொன்றது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவின் பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன்.
Recommended Video
இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23).பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வரும் ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த எம். ஏ படிக்கும் மாணவியான கிரீஷ்மா(22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலி வீட்டில் குளிர்பானம் குடித்தார்
இந்தநிலையில், கடந்த 14-ஆம் தேதி அன்று நண்பர் ஒருவருடன் ஷாரோன் ராஜ் காதலி கிரீஷ்மா வீட்டுக்கு சென்றார். அப்போது நண்பர் வீட்டின் வெளியில் நிற்க, ஷாரோன் ராஜ் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்தார். தொடர்ந்து நண்பருடன் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது திடீரென நண்பரிடம் தனக்கு வயிறு வலிப்பதாக ஷாரோன் ராஜ் கூறினார். ஏன் என்று நண்பர் கேட்க, காதலி கிரீஷ்மா வீட்டில் கசாயம் மற்றும் குளிர்பானம் குடித்தேன். அதில் இருந்து வயிற்று வலி தொடங்கிவிட்டது என்று கூறினார்.

சிகிச்சை பலனின்றி பலி
ஆனால் வலி தொடர்ந்து அதிகரித்ததால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு வலி நிற்கவில்லை. இதனால் ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலினின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவரின் தந்தை புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஜெயராஜன், மகனின் காதலி கிரீஷ்மா தான் குளிர்பானத்தில் எதையோ கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஜெயராஜன் கூறுகையில், "எனது மகன் ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா பெண்ணை காதலித்து வந்தான். அந்த பெண்ணுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. அப்போது பெண்ணுக்கு ஜாதகம் பார்த்த அவர்கள் இந்த திருமணம் நடந்தால் பெண்ணின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று ஜாதகர் கூறியிருக்கிறார்.

4 பேரிடம் விசாரணை
இதேபோல் என் மகனால் இந்த திருமணத்துக்கு இடையூறு ஏற்படும் என்று கருதி கிரீஷ்மாவின் குடும்பத்தினர் என் மகனை வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டனர்" என்று கூறினார். இந்த புகாரை வைத்து மீண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். குறிப்பாக ஷாரோன் ராஜுக்கு குளிர்பானம் கொடுத்த கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம்
இதில் கிரீஷ்மாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் காதலனுக்கு கொடுத்த குளிர்பானத்தில் திராவகம் கலந்துகொடுத்ததாக திடுக் தகவலை வெளியிட்டார். இது தொடர்பாக ஷாரோன் ராஜை கிரீஷ்மா காதலித்து வந்த நிலையில், வீட்டில் பெற்றோர் ராணுவ வீரர் ஒருவருக்கு நிச்சயம் செய்தனர். இதனால் ஷாரோன் ராஜ் இதுபற்றி காதலி கிரீஷ்மாவிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் நான் வீட்டில் பார்த்தவரை தான் திருமணம் செய்வேன் என்று கூறினார்.

காதலி கைது
எனினும் ஷாரோன் ராஜால் தன் திருமணத்திற்கு தடங்கல் வரும் என்ற பயத்தால் சம்பவத்தன்று அவரை அழைத்து குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்துள்ளார். இதனால் அவர் வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளா. இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். இதில் அவரது பெற்றோருக்கும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள எல்லையில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் - கேரளா என இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவை மிஞ்சும் வகையில்..
சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சதிவலையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது; ''கல்லூரியில் படிக்கும் போது ஷாரோனும் கிரீஷ்மாவும் நெருங்கி பழகியுள்ளனர். பல இடங்களுக்கு இந்த ஜோடி ஒன்றாக சுற்றியுள்ளது. அப்போது ஷரோன் பல புகைப்படங்களையும் தனது செல்போனில் எடுத்து வைத்திருக்கிறார். இதனால், வீட்டில் திருமணம் பேச்சு அடிபட்டதும் செல்போனில் எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு கிரீஷ்மா, ஷாரோனிடம் வலியுறுத்தியுள்ளார்.

புகைப்படத்தை அழிக்க மறுத்தார்
ஆனால், காதலை கைவிட மறுத்த ஷாரோன் புகைப்படத்தையும் அழிக்க மறுத்து இருக்கிறார். இதனால், எங்கே தனது நிச்சயம் செய்யப்பட்ட வரும் கால கணவருக்கு ஷாரோன் புகைப்படத்தை அனுப்பி வைத்து விடுவாரோ என்ற அச்சத்தில் இந்த கொலையை அரங்கேற்றியிருக்கிறார் என்று தெரிகிறது. இந்த கொலை திட்டத்தில் கிரீஷ்மாவுக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். கிரீஷ்மாவின் பெற்றோரும் முன்னுக்கு முன் முரணான தகவல்களை அளித்து வருகின்றனர். எனவே கூடுதல் விசாரணை தேவைப்படுகிறது" என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications