திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேம் சேஞ்சராக மாறும்.. தென் கொரியாவின் 'கொரோனா' மாடல்.. பிளாஸ்மா தெரபியை கையில் எடுத்த கேரளா!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அங்கு இதற்கான சோதனைகள் நடந்து வருகிறது.

Recommended Video

    கொரோனா தடுப்பு நடவடிக்கை... உலக நாடுகளை வியக்க வைத்த கேரளா

    கேரளாவில் இந்த நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளும் முன் பிளாஸ்மா தெரபி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்கு ஆண்டிபாடிகளை கடத்துவது ஆகும்.

    அதாவது ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவார்கள். இதை ஏற்கனவே பலமுறை வெவ்வேறு நோய்களுக்கு எதிராக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    எப்படி சிகிச்சை செய்வார்கள்

    எப்படி சிகிச்சை செய்வார்கள்

    ஆம் பிளாஸ்மா தெரபியை 1918 மற்றும் 1958ல் வந்த ஃப்ளு காய்ச்சலுக்கு எதிராக பயன்படுத்தினார்கள். அதன்பின் சார்ஸ், எச்1என்1, எபோலாவிற்கு எதிராக பயன்படுத்தினார்கள். இதில் எல்லாம் பிளாஸ்மா சிகிச்சை பெரிய பலன் அளித்தது. தற்போது கொரோனாவிற்கு எதிராக இதை பயன்படுத்த உள்ளனர். பொதுவாக கொரோனா தாக்கி அதில் இருந்து குணமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும்.

    இயல்பாக அதிகரிக்கும்

    இயல்பாக அதிகரிக்கும்

    இந்த எதிர்ப்பு சக்தி செல்கள் அவர்களின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும். இதன் மூலம் கொரோனா தாக்கி குணமடைந்த நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து கொரோனா பாதித்த வேறு ஒரு நபருக்கு செலுத்துவார்கள். அதாவது கொரோனா தாக்கி குணமடைந்த நபரின் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொரு நபருக்கு செலுத்தி அவருக்கு கொரோனா சிகிச்சை அளிப்பார்கள்.

    எப்படி உதவும்

    எப்படி உதவும்

    இப்படி செய்வதன் மூலம் உடலில் புதிதாக செலுத்தப்படும் எதிர்ப்பு சக்தி செல்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும். அது புதிய பலத்துடன் இருக்கும். நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி தானாக மீண்டும் வரும் வரை இந்த வெளியே இருந்து வந்த எதிர்ப்பு சக்தி செல்கள் தனது பணியை சிறப்பாக செய்யும். இதுதான் பிளாஸ்மா சிகிச்சை முறையாகும்.

    பல நாடுகளில் உதவி உள்ளது

    பல நாடுகளில் உதவி உள்ளது

    ஏற்கனவே பல நாடுகளில் இந்த கொரோனா பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பலர் இப்படி குணப்படுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் தென் கொரியாவில் இப்படி பலர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தென் கொரியாவில் கிட்டத்தட்ட 30% பேர் இப்படி பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனாவின் தீவிரத்தில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். அங்கு வேகமாக கொரோனா நோயாளிகள் குணமானது இப்படித்தான்.

    வேகமான முடிவு

    வேகமான முடிவு

    இந்த சிகிச்சை முறை மூலம் கொரோனா நோயாளிகளுக்கு புதிய பிளாஸ்மா செல்கள் உள்ளே செலுத்தப்படும். அதே சமயம் இன்னொரு பக்கம் கொரோனாவின் பக்க விளைவுகளை குணப்படுத்தும் மருந்துகள் ஒரு பக்கம் வழங்கப்பட்டு வரும். இப்படி கூட்டு சிகிச்சை வழங்குவதன் மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்துகிறார்கள். இந்த சிகிச்சை முறை வேகமானது. நான்கு - ஐந்து நாட்களில் இதன் மூலம் உடலில் முன்னேற்றம் ஏற்படும்.

    கூட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்

    கூட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்

    பலர் வெறும் 10 நாட்களில் குணமடைந்து இருக்கிறார்கள். ஆனால் இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து இல்லை. கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் நம்முடைய உடலில் இருக்கும் செல்களை மாற்றும். நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க செய்யும். உலகம் முழுக்க இந்த சிகிச்சை பெரிய அளவில் பலன் அளித்துள்ளது.

    கேரளா நிலை

    கேரளா நிலை

    கேரளாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அங்கு இதற்கான சோதனைகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் கேரள அரசு அனுமதி கேட்டது. இதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. இதனால் தற்போது அங்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை மேற்கொள்ள கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    English summary
    Coronavirus: South Korea's success model, Kerala to use Plasma Therapy against the COVID-19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X