இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி தேவை இல்லை.. சிந்திக்க கூடியவர் தேவை! யஷ்வந்த் சின்ஹா கருத்து
திருவனந்தபுரம்: இந்தியாவுக்கு சுதந்திரமாக சிந்தித்து பேசும் குடியரசுத் தலைவரே தேவை என்றும், ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவையில்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.

வேட்பாளர்கள் யார்?
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். முறையே இவர்கள் இருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆதரவு திரட்டும் யஷ்வந்த் சின்ஹா
இதனைத்தொடர்ந்து மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனையொட்டி இன்று தமிழ்நாடு வரும் யஷ்வந்த் சின்ஹா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா கருத்து
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, இந்தியாவுக்கு சுயமாக சிந்தித்து பேசுவதோடு, அரசியலைப்பின் பாதுகாவலராக செயல்படும் குடியரசுத் தலைவரே தேவை. வெறும் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவை இல்லை. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள் பெருமை கொள்ளும் வகையில், நான் செயல்படுவேன் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டம்
மேலும், அக்னிபாத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, மத்திய பாஜக அரசால் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடமும் எவ்வித ஆலோசனையும் செய்யப்படவில்லை. அனைத்து விஷயங்களையும் வேகமாக செய்ததால், நாடு தழுவிய போராட்டங்கள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண்பதற்கான வழி இதுவல்ல என்றும் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications