Actor Dileep: கேரள நடிகை பலாத்கார வழக்கில் நாளை தீர்ப்பு! நடிகர் திலீப்பிற்கு தண்டனை கிடைக்குமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது பதியப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (டிசம்பர் 8) வெளியாகிறது. இந்த தீர்ப்பை எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் வழங்கவுள்ளது.

2017ல் கொச்சியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது. எட்டு வருடங்களாக பல்வேறு திருப்பங்கள், விவாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. பிப்ரவரி 17, 2017 அன்று இளம் நடிகை கொச்சியில் கடத்தப்பட்டார். திருச்சூரிலிருந்து கொச்சிக்குச் செல்லும்போது இந்த சம்பவம் நடந்தது. ஆறு நபர்கள் அவரை காரில் கடத்தினர். பல்சர் சுனி அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த சம்பவத்தை பல்சர் சுனி வீடியோவாக எடுத்து வைத்து பிளாக் மெயில் செய்யவும் திட்டமிடப்பட்டது.
இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு நடிகை ஒரு இயக்குநர் வீட்டருகே விடப்பட்டார். இதையடுத்து புகாரின் பேரில் அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. பல்சர் சுனி தானாகவே சரணடைந்து முக்கியக் குற்றவாளியானார். மேலும் பலர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் தொலைபேசி பதிவுகள், தொடர்புகள் வெளிப்பட்டன. இதன் மூலம் நடிகர் திலீப்பிற்கும் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தொடர்பிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் ஜூலை 10, 2017 அன்று திலீப் கைது செய்யப்பட்டு 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் மீது குற்றச் சதி, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையின் விசாரணையில், திலீப் இந்த பாலியல் வன்கொடுமையை திட்டமிட்டே செய்தது தெரியவந்தது. நடிகை மீது அவருக்குப் பகையுணர்வு இருந்தது. 2012இல் திலீப் மஞ்சு வாரியரை மணந்தார். இருப்பினும், காவ்யா மாதவனுடன் உறவில் இருந்தார். திலீப் மீது மஞ்சுவுக்குச் சந்தேகம் ஏற்பட, இந்த நடிகை, மஞ்சு வாரியரிடம் உண்மையைச் சொன்னார்.
இது திலீப்பை மிகவும் கோபமடையச் செய்ததாகப் பலர் தெரிவித்தனர். மஞ்சு, திலீப் 2015இல் விவாகரத்து பெற்றனர். திலீப் 2016இல் காவ்யாவை திருமணம் செய்து கொண்டார். நடிகையை பழிவாங்க திலீப் திட்டமிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில் கைதான திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கை எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்க திலீப் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாக ஆடியோ வெளியானது. கடந்த 2020 ஆம் ஆண்டில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில இந்த வழக்கில் நாளை(டிசம்பர் 8 ஆம் தேதி) இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications