"ஜூஸ் சாப்பிடுறீங்களா.. அய்யோ வேணாங்க.." ஷாரோன் மாதிரி இல்ல.. தோழிங்க விஷயத்தில் சிம்பு உஷார்தான்!
திருவனந்தபுரம்: கேரளாவில் காதலன் ஷாரோனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காதலியின் செயலை வைத்து முன்பே கணித்த சிம்பு! என்ற கேப்ஷனுடன் இணையத்தில் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவின் பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன்.
இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வரும் ஷாரோன் ராஜ் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த எம்.ஏ படிக்கும் மாணவியான கிரீஷ்மா(22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.'

திடுக்கிடும் தகவல்கள்
இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி அன்று நண்பர் ஒருவருடன் ஷாரோன் ராஜ் காதலி கிரீஷ்மா வீட்டுக்கு சென்றார். அப்போது ஷாரோனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கிரீஷ்மா கொடுத்துள்ளார். இதை குடித்த ஷாரோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிளிக்காமல் உயிரிழந்தார். இந்த வழக்கில் தோண்ட தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

கிரீஷ்மா குடும்பத்திற்கு ஆதரவாக
காதலி கிரீஷ்மா வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்திற்காக காதலன் ஷாரோனிடம் காதலை கைவிட்டு விடுமாறு கூறியிருக்கிறார். ஆனால், ஷாரோன் ஏற்க மறுத்ததால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காதலி கிரீஷ்மா, தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரீஷ்மா குடும்பத்திற்கு ஆதரவாக பாறசாலை பகுதி போலீசார் செயல்படுவதாக ஷாரோனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

காவல் ஆய்வாளர் பேசிய ஆடியோ
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனய்பு பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், தாங்கள் நடத்திய விசாரணை அடிப்படையிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினரும் விசாரணையை நடத்தியதாக பாறசாலை காவல் ஆய்வாளர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்வேறு மீம்ஸ்கள்
கேரள - தமிழக எல்லையில் நடைபெற்ற ஷாரோன் கொலை வழக்கில் தினம் தினம் பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரபப்பை கிளப்பி வருகின்றன. இதனிடையே, காதலை கைவிட மறுத்ததால் காதலியே ஷாரானுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பத்தை மையப்படுத்தி பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். காதலனுக்கு கிரீஷ்மா மாம்பழ ஜூஸ் கொடுத்த வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவில் கிரீஷ்மா எந்த குற்ற உணர்வும், கொலை செய்யப்போகிறோம் என்ற பதற்றமும் இல்லாமல் குளிர்பானம் கொடுக்கும் காட்சி இருப்பதால் அதை பார்த்து ஆண் சமூகமே அதிர்ந்து போய் கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
|
அன்றே கணித்தார் சிம்பு
குறிப்பாக சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் உள்ள ஒரு காட்சியில் சிம்பும் மஞ்சுமா மோகனும் பைக்கில் சென்று கொண்டு இருப்பார்கள். பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது சிம்பு தண்ணீரை எடுத்து குடிப்பார். இதை கவனித்த மஞ்சுமா மோகன் கூல்டிரிங்க்சை எடுத்து சிம்புக்கு குடிக்க கொடுப்பார். ஆனால், வேண்டாம் என்று சிம்பு மறுத்துவிடுவார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு சிம்பு அப்பவே தோழியிடம் இதை தவிர்த்தார் என்று நெட்டிசன்கள் மீம்ஸ்கள் வெளியிட்டு வருகின்றனர்.

கூல்டிரிங்க்ஸ் குடிக்கிறியாடா..
இதற்கு கமெண்ட் தெரிவித்தும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதில், கூல்டிரிங்க் குடிக்கிறியாடா கண்ணா என்று கேட்பது போல பதிவிட்டு காதலி கிரீஷ்மா ஜூஸ் மூடியை திறப்பது போன்ற புகைப்படமும் பரவி வருகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications