அரபிக்கடலில் சூறாவளி - கேரளாவில் நீடிக்கும் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: அரபிக்கடலில் இரண்டு தினங்களுக்கு சூறாவளி வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 15 வரை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வானிலை துறை மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அக்டோபர் 10ஆம் தேதியே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகியுள்ளது . வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - ஒடிசா நோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை வெள்ளம்
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக கேரளாவில் அக்டோபர் 17 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாவே பலத்த மழை பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பேரிடர் மீட்புக்குழுவினர்
கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் மலைப்பகுதிகளில் இரவு நேர பயணம் தடைசெய்யப்பட்டது, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 622 பேர் 27 நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

பலத்த சூறாவளி வீசும்
இன்றும் நாளையும் தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பயணத்திற்கு தடை
கனமழை காரணமாக மலைப்பகுதிகளுக்கு இரவில் பயணம் செய்வதற்கு அரசாங்கம் முற்றிலும் தடை விதித்துள்ளது. பயணத் தடை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட அதிகாரிகளும் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, திருவனந்தபுரம் தவிர 13 மாவட்டங்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து அலுவலகத்திலிருந்து மழை எச்சரிக்கையைப் பெற்றுள்ளன.

வெள்ளத்தால் பாதிப்பு
வெள்ளத்தால் பாதிக்கடும் என அடையாளம் காணப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆறு பேரிடர் மீட்புக்குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளத்தை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநிலத்தில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்களுக்கு அதிக வசதிகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளச்சேதம் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அணைகள் சாட்சியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரஞ்ச் அலெர்ட்
கேரளாவின் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 15 வரை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் முறையே மிக அதிக மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications