கேரளா கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து- 10 பேர் கவலைக்கிடம்; 154 பேர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது நள்ளிரவில் பட்டாசுகள் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கிய 10 பேர் மிகவும் ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 154 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் உள்ள அஞ்சுதம்பலம் வீரரேர்கவு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன.

கோவில் திருவிழா வான வேடிக்கைகளின் போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து எரிந்தது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.
கோவில் திருவிழாவில் வானவேடிக்கையை ரசித்துக் கொண்டிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வெடித்துச் சிதறிய பட்டாசுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டு அலறித் துடித்தனர்.
இந்த சம்பவத்தில் 154 பேர் படுகாயமடைந்த நிலையில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் கூறுகையில், பட்டாசுகள் அனுமதியின்றி குடோனில் வைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்து தொடர்பாக கோவில் நிர்வாக குழு தலைவர், செயலாளரை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications