திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபைக்கு வந்த ஆளுநர்.. சுற்றி மறித்த எம்எல்ஏக்கள்.. கேரள சட்டசபையில் பகீர்.. கடைசியில் டிவிஸ்ட்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா சட்டசபைக்கு வந்த அம்மாநில ஆளுநர் ஆரிப் கான் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களால் சுற்றி வளைக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த சிஏஏ சட்டத்தை கேரளா அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. முதலில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மாநிலம் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்றும் கேரள மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.

ஆளுநர் எதிர்ப்பு

ஆளுநர் எதிர்ப்பு

கேரளாவில் அம்மாநில சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சனம் செய்து இருந்தார். அதேபோல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையும் ஆரிப் கான் விமர்சனம் செய்து இருந்தார். என்னிடம் கேட்காமல் எப்படி வழக்கு தொடுத்தீர்கள். மக்களின் வரிப்பணத்தை நீங்கள் இப்படி செலவு செய்ய கூடாது. உங்களுடைய கொள்கைக்காக மக்களின் வரிப்பணத்தை செலவு செய்ய கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

பெரிய அளவில் கூச்சல்

பெரிய அளவில் கூச்சல்

இந்த நிலையில் இன்று கேரளா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடருக்காக கூடியது. அவையின் முதல்நாள் உரையை ஆற்றுவதற்காக அம்மாநில ஆளுநர் ஆரிப் கான் அவைக்கு வந்தார். ஆனால் அங்கு இருந்த காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. கோ பேக் கவர்னர் என்று தொடர்ந்து கூச்சல் போட்டனர். ஆளுநர் இங்கே வர கூடாது என்று தொடர்ந்து கூச்சல் போட்டனர். இதனால் அவையில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இதன்பின் அங்கு இருந்த பாதுகாலவர்கள், ஆளுநருக்கு அரணாக நின்றார்கள். ஆனால் அதன்பின்பும் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் கூச்சலை நிறுத்தவில்லை. இதனால் பாதுகாவலர்கள் உதவியுடன், எம்எல்ஏக்கள் எல்லோரும் வெளியே அனுப்பப்பட்டனர். இதன் பின் அவை கூடியது. ஆனால் சில நிமிடத்தில் அவைக்கு வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசியில் டிவிஸ்ட்

கடைசியில் டிவிஸ்ட்

இதையடுத்து, சிஏஏவிற்கு எதிரான வாசகத்தை வாசிக்கும்படி ஆளுநர் ஆரிப் கானிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகத்தை கேரள சட்டப்பேரவையில் வாசித்தார் ஆளுநர் ஆரிப் கான். காங்கிரஸ் எம்எல்ஏக்களை சாந்தப்படுத்தும் விதத்திலும், பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் விதத்திலும், ஆளுநர் சிஏஏவிற்கு எதிராக வாசகத்தை வாசித்தார். கேரள அரசின் நோக்கம், முதல்வர் பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று வாசித்ததாக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Kerala governor reads out a paragraph against CAA in his budget session speech after opponents' turmoil in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X