ஜெட் வேகத்தில் கொரோனா.. 4 வாரங்கள் மிக முக்கியமானது; கவனம் தேவை.. மக்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்று அந்த மாநில மக்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று அந்தளவுக்கு பாதிப்பில்லை. ஆனால் 'மகாராஷ்டிராவிலும், 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 'கொரோனாவின் தேசம்' என்று அழைக்கப்படும் அளவுக்கு அங்கு கடந்த இரண்டு மாதங்களாக 21,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கூட கேரளாவில் 24,000 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 14 சதவீதத்தை கடந்து செல்கிறது. ஓணம் பண்டிகை வந்ததால் கேரளாவில் கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்பட்டு இருந்த முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது. மேலும் அத்தியாவசிய கடைகள் உள்பட அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கடுமையாக்க வேண்டும்
இந்த தளர்வுகள் காரணமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு 24,000-ஐ கடந்து செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நாடுமுழுவதும் 37,593 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அதில் கேரளாவில் மட்டும் 24,296 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தொற்று அதிகமாக இருப்பதால் ஏற்கனவே அங்கு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று கேரள அரசை கேட்டுக் கொண்டது.

மீண்டும் முழு ஊரடங்கு
இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா 3-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மாநிலத்தில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கூறியதாவது:-

மிக முக்கியம்
அடுத்த நான்கு வாரங்களில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஓணம் விடுமுறைக்கு பிறகு நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அரசுக்கு மக்களின் உயிரும் முக்கியம், பொருளாதார நிலையம் முக்கியம். மற்றொரு லாக்டவுன் அமல்படுத்துவது சாத்தியமல்ல. மக்களே தங்களின் பொறுப்பினை உணர்ந்து கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று வீணா ஜார்ஜ் கூறினார்.

தளர்வுகள் எப்படி?
கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை(டிபி ஆர்) வைத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுளும் விதிக்கப்பட்டு வருகின்றன. .அதாவது 5% க்குக் கீழே உள்ள டி.பி.ஆர் உள்ள பகுதிகள் ஏ எனவும், 5 முதல் 10% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் பி எனவும், 10 முதல் 15% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் சி எனவும், 15% மேல் டிபிஆர் கொண்ட பகுதிகள் டி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் ரேட் மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications