திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிற்காமல் சென்ற தனியார் பஸ்.. ரோட்டில் தனி ஆளாக மறித்து மாணவர்களை ஏற்றிவிட்ட பள்ளி முதல்வர்-வீடியோ

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கேரளாவில் பள்ளி முதல்வர் தனி ஆளாக ரோட்டில் இறங்கி நிற்காமல் சென்ற தனியார் பஸ்சை மறித்து மாணவர்களை ஏற்றிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் பள்ளி முதல்வரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேருந்துகளில் மாணவ-மாணவிகள் இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.

இந்த திட்டம் என்பது மாணவ-மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதேபோல் கேரளாவிலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பஸ்பாஸ் திட்டம் நடைமுறையில் உள்ளது.

நான் அரசுப் பள்ளி மாணவன்.. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா? - வெகுண்டெழுந்த எடப்பாடி பழனிசாமி! நான் அரசுப் பள்ளி மாணவன்.. இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா? - வெகுண்டெழுந்த எடப்பாடி பழனிசாமி!

கேரளாவில் மாணவர்களுக்கான சலுகை

கேரளாவில் மாணவர்களுக்கான சலுகை

கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 3 மாத காலத்துக்கான பஸ் பாஸ் நடைமுறை உள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தி இந்த பஸ்பாஸை மாணவர்கள் பயன்படுத்தலாம். மேலும் தனியார் பேருந்தில் மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் பள்ளி சீருடை இருந்தாலே போதும் சாதாரண பயணச்சீட்டு கட்டணத்தில் மாணவர்கள் பயணிக்க முடியும். இதன்மூலம் மாணவர்கள் தனியார் பஸ்களிலும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

மாணவர்களை ஏற்ற மறுக்கும் தனியார் பஸ்

மாணவர்களை ஏற்ற மறுக்கும் தனியார் பஸ்

இதனால் பெரும்பாலான தனியார் பேருந்துகள் மாணவர்களை ஏற்ற மறுக்கின்றன. மாணவர்களை ஏற்றினால் வருமானம் குறைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் பல இடங்களில் மாணவர்களை பேருந்தில் ஏற்றாமல் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தாழக்கோடு பகுதியில் பாலக்காடு - கோழிக்கோடு நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி முன்பு மாணவர்கள் நின்றாலும் தனியார் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன.

களமிறங்கிய பள்ளி முதல்வர்

களமிறங்கிய பள்ளி முதல்வர்

இதுபற்றி மாணவர்களும், பள்ளி ஆசிரியர்களும் அதிகாரிகளுக்கு பலமுறை புகார்கள் அளித்தும் எந்த பலனும் இல்லை.தொடர்ந்து இந்த செய்தி பள்ளியின் முதல்வர் சகீர் காதுக்கு சென்றது. இதையடுத்து அவர் தானே களத்தில் இறங்க முடிவு செய்தனர். அதன்படி முதல்வர் சகீர் பள்ளி முடியும் நேரம் முன்பே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அந்த வழியாக தனியார் பேருந்து வந்தது.

பேருந்தை தடுத்து நிறுத்தம்

பேருந்தை தடுத்து நிறுத்தம்

இதையடுத்து ரோட்டின் நடுப்பகுதிக்கு சென்ற அவர் பேருந்தை மறித்தார். மேலும் நடத்துனரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியின் அருகே உள்ள பேருந்து நிறுத்தம் வரை நடந்தே வந்து அங்கு பேருந்திற்காக காத்திருந்த மாணவர்களையும் அதே பேருந்தில் அனுப்பி வைத்தார். தனி ஆளாக நின்று போராடிய பள்ளி முதல்வர் சகீரின் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

English summary
In Kerala, the incident where the school principal stopped a private bus that went on the road without stopping and picked up the students has caused a stir. Now that the related video has been released, the public is praising the school principal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X