மருமகனுடன் இணைந்து சித்ரவதை.. கொடுமை.. சபரிமலை போராளி ரெஹானா பாத்திமா மீது தாயார் போலீஸில் புகார்
திருவனந்தபுரம்: சபரிமலை போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலம் அடைந்த சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது அவரது தாயார் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருமகனுடன் சேர்ந்து தன்னை ரெகானா சித்ரவதை செய்வதாகவும், மிரட்டுவதாகவும் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.
சமுதாய பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர், பெண்ணியவாதி எனக் கூறிக்கொள்ளும் ஒருவர் மீது அவரது தாயாரே புகார் அளித்திருப்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

ஸ்தம்பிக்க செய்த சபரிமலை போராட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வரை செல்லக்கூடாது என்பது ஐதீகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணியவாதிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கோயில் என்பது இரு பாலருக்கும் பொதுவானதுதான். எனவே சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்" எனத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து பல இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், சில பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர். இவர்களில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கேரளா முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. மேலும், சபரிமலை கோயிலுக்கு சென்ற பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டலும் விடுத்தனர். சபரிமலைக்கு சென்ற பெண்களில் பலர் இந்து அல்லாத மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அவர்கள் மீது ஒருதரப்பினர் கோப்படுவதற்கு காரணமாக இருந்தது. இதனால் அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். போலீஸ் பாதுகாப்பையும் மீறி அவர்களில் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பெண்களை அவர்களது குடும்பத்தினரே ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகளையும் காண முடிந்தது.

தாயார் புகார்
இந்த சூழலில், சபரிமலை போராட்டத்தில் பங்கேற்ற ரெஹானா பாத்திமா மீது அவரது தாயார் பியாரி என்பவர் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அதில், "எனது மகள் ரெஹானாவும், அவரது கணவர் மனோஜும் என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்தனர். இதனால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களின் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது ஆலப்புழாவில் உள்ள உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறேன். ஆனால் ரெஹானா, இந்த உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி மிரட்டுகிறார். எனவே அவரை எச்சரிக்க வேண்டும்" என பியார் கூறியிருந்தார்.

போலீஸ் எச்சரிக்கை
இந்த புகாரை பெற்ற போலீஸார், ரெஹானா பாத்திமாவை நேற்று காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர், இனி அவரது தாயாரை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என அவர்கள் எழுதி வாங்கினர். மேலும், இனி இதுபோன்ற புகார் வந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்து அனுப்பினர். தனது தாயாரை கூட ஒழுங்காக பார்க்க முடியாத ரெஹானா பாத்திமா, சமூக பிரச்சினைக்கு குரல் கொடுப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Click it and Unblock the Notifications