ஒன்றாக அமர எதிர்ப்பு.. பஸ் நிறுத்த சீட்டை அகற்றிய கும்பல்! மடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் பதிலடி!
திருவனந்தபுரம்: கேரளாவில் மாணவ-மாணவிகள் அருகருகே அமர எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் ஒருவரின் மடியில் இன்னொருவர் அமர்ந்து போட்டோ எடுத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி(சிஇடி) உள்ளது. இந்த கல்லூரியின் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த மாணவ- மாணவிகள், பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடை மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த பஸ் நிறுத்த இருக்கையில் கல்லூரி மாணவ-மாணவிகள் சேர்ந்து இருப்பது வழக்கம். இதனை அங்கும் வசிக்கும் சிலர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இருக்கைகள் சேதம்
இதனால் கடந்த 18ம் தேதி அங்கு வந்த மர்மநபர்கள் இருக்கையை சேதப்படுத்தினர். அதாவது இருக்கைகள் இடையே இடைவெளி ஏற்படுத்தும் வகையில் சில இருக்கைகள் அகற்றப்பட்டு இருந்தது. இதனை பார்த்த மாணவ-மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இணையதளத்தில் பரவும் போட்டோ
மேலும் மாணவ-மாணவிகள் நூதன முறையில் எதிர்ப்பை காட்டியுள்ளனர். அதாவது சேதப்படுத்தப்பட்ட இருக்கையில் மாணவ-மாணவிகள் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர். நட்பின் அடிப்படையில் மாணவரின் மடியில் மாணவிகள் அமர்ந்துள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாலின வேறுபாடு இல்லை
இந்த படங்களை மாணவ-மாணவிகள் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‛‛நாங்கள் நண்பர்கள். எங்களின் நட்புக்கு பாலின வேறுபாடு இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் அருகில் உட்காருவதை நீங்கள் விரும்பவில்லை, ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் மடியில் உட்காரலாமா?'' என கேள்வி கேட்டுள்ளனர். இதுபற்றி கல்லூரி யூனியன் பிரதிநிதியான அங்கிதா ஜாசி கூறுகையில், ‛‛குடியிருப்பு சங்கம் சார்பில் இருக்கைகளில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இது சகிப்புத்தன்மையற்ற செயல்'' என்றார்.

மேயர் கூறுவது என்ன?
திருவனந்தபுரம் நகர மேயர் ஆர்யா எஸ் ராஜேந்திரன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து இருக்கை சேதப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கேரளா முற்போக்கு சிந்தனை கொண்ட மாநிலம். இங்கு இத்தகைய செயல் கண்டனத்துக்குரியது. இருபாலினத்தவர்கள் அருகருகே இருப்பதை கண்டிக்கும் நபர்கள் இருண்ட உலகத்தில் வாழ்கின்றனர் என நினைக்கிறேன். காலம் மாறிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது'' என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications