கேரளாவில் ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை அங்குள்ள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரம் வரை கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் களை கட்டும்.

ஓணம் பண்டிகை
கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டு பழைய உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் கொணடாடி வருகின்றனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களும் கேரள மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவர். குறிப்பாக கசவு என்று சொல்லக்கூடும் வெண்ணிற ஆடையினை உடுத்திக்கொள்வர்.

சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்
10 நாட்களும் பெண்கள் இந்த வெண்ணிற ஆடை அணிந்து கைகொட்டுக்கிளி நடனம் ஆடுவது அழகாக இருக்கும். இதேபோல் வீட்டு வாசலில், 10 நாட்களும் தொடர்ந்து அத்தப்பூக்கள் கொண்டு கோலங்கள் இடுவது கண்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆண்டுதோறும் இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது
அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று நடை திறக்கப்பட்டாலும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வரும் 10 ஆம் தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். நடை திறக்கப்பட்டுள்ள இந்த நாட்களில் படி பூஜை, உதயஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஓணம் விருந்து வழங்கப்படும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு
ஓணம் பண்டிகை நிறைவு பெற்றதும் 10 ஆம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும். அதோடு ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளும் நிறைவடையும். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல் பகுதியில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் எனத்தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications