போன் பேசுனது குத்தமாயா? பார்லர் வாசலில் பாக்சிங் செய்த சேச்சி! பிக் ஷோவுக்கே டஃப் கொடுப்பாங்க போல.!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் பியூட்டி பார்லர் முன்பு நின்று செல்போன் பேசியதற்காக பட்டதாரி பெண்ணை தனது குழந்தையின் கண் முன்பே நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்து உதைக்கும் பியூட்டி பார்லர் உரிமையாளரின் அதிர்ச்சிகர வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாஸ்தமங்கலம் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அதே பகுதியில் பெண்களுக்கான பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.
மருதங்குழி பகுதியை சார்ந்த சேபா என்ற பட்டதாரி பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நகையை அடகு வைப்பதற்காக சாஸ்தமங்கலம் பகுதிக்கு வியாழக்கிழமையன்று வந்துள்ளார்.

ப்யூட்டி பார்லர்
இதனிடையே அந்தப் பெண் மீனா என்பவருக்கு சொந்தமான பியூட்டி பார்லர் முன்பு நின்று செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.இதைப் பார்த்த மீனா அந்தப் பெண்ணுடன் முதலில் வாக்கு தகராறில் ஈடுபட்டு, நடுரோட்டில் தள்ளி விட்டுள்ளார் .

பெண் மீது தாக்குதல்
பின்பு தனது செருப்பை கழற்றி நடுரோட்டில் வைத்து அவரது மகளின் முன்னிலையில் தாறுமாறாக செருப்பால் தாக்கியுள்ளார். இதை தட்டி கேட்க சென்ற சிலரையும் இவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் வீடியோ எடுத்தவர்களையும் திட்டியுள்ளார்.

பெரும் பரபரப்பு
தனது அம்மாவை செருப்பால் அடிப்பதை பார்த்த மகள் நடுரோட்டில் நின்று அழுதுள்ளார்.தொடர்ந்து பட்டதாரி பெண்ணை செருப்பால் அடித்து உதைக்கும் மீனாவின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

அதிரடி கைது
இந்த நிலையில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் மீனாவின் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பார்லர் முன்பு பேசியதற்காக பெண்ணை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications