உள்ளாடையை கழட்டுங்க! கதறியழுத ‘நீட் தேர்வு’ மாணவிகள்! உள்ளாடையா? எதிர்காலமா? மிரட்டிய அதிகாரிகள்!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால் மாணவியின் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என தேர்வு மைய அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஜூலை 17ஆம் தேதியான நேற்று நடத்தியது.
நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்காக பெறப்பட்ட நிலையில், அதில் 90% மாணவர்கள் மேற்பட்டோர் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தனர். அவர்களிலும் நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 18,72,339 மாணவர்கள் எழுதினர்.

நீட் தேர்வு
நீட் தேர்வின் போது முறைகேடுகளை தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது மதியம் 12:30 மணிக்கு வந்துவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்ட நிலையில், உலோகங்கள் கொண்டு செல்லப்பட அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கேரளாவில் சர்ச்சை
குறிப்பாக பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் , கைக்கடிகாரம், கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்தன. தேர்வு அறைக்குச் சென்ற மாணவ மாணவிகள் கடும் பரிசோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை தேர்வுமைய அதிகாரிகள் கழற்ற வற்புறுத்தியதாக, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாடைகள் அகற்றம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது மகள் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா மாநிலம் மருத்துவ இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தேர்வு மைய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியே பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவியின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் மாணவியின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால் மெட்டல் டிடெக்டர் எச்சரிக்கை செய்துள்ளது.

மாணவிகள் அதிர்ச்சி
இதையடுத்து அந்த கொக்கிகளை அகற்றும்படி அதிகாரிகள் மாணவியை வற்புறுத்தியுள்ளனர். மேலும் அதனை அகற்றாவிட்டால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க முடியாது என வற்புறுத்தியதோடு உள்ளாடை முக்கியமா உங்கள் எதிர்காலம் முக்கியமா என மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர். இதையடுத்து தேர்வு எழுத வந்திருந்த பெரும்பான்மை மாணவிகள் உள்ளாடைகளை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டிய தர்ம சங்கடமான சூழல் உருவானது. இதனால் அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறிய நிலையில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி உத்தரவு
இந்த புகார் தேர்வு மைய அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு அந்த மாணவியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த சர்ச்சை சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதோடு விசாரணையை அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications