இந்தியர்கள் ராமாயணம், மகாபாரதம் படிக்க வேண்டும்.. சொல்வது வினாடி வினாவில் வென்ற முஸ்லீம் மாணவர்கள்
திருவனந்தபுரம்: அனைத்து இந்தியர்களும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்க வேண்டும் என்று கேரளாவில் ராமாயண வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மலப்புரத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரத்தில் கடந்த மாதம் ராமாயண வினாடி வினா போட்டி நடந்தது.
ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த வினாடி வினா போட்டியில் கேரளாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மானவிகள் கலந்துகொண்டனர்.

கேரளாவில் வினாடி வினா போட்டி
மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்ற நிலையில், இறுதியில் வெற்றி பெற்றவர்களாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் 2 இடங்களை பிடித்தது முஸ்லிம் மாணவர்கள். கேரள மாநிலத்தின் மலப்புரம் பகுதியை சேர்ந்த 2 மாணவர்கள் தான் ராமாயண வினாடி வினா போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். அவர்கள் வளஞ்சேரியில் உள்ள கே.கே.எஸ்.எம் இஸ்லாமிய மற்றும் கலைக்கல்லூரியில் எட்டு ஆண்டுகள் படிப்பான 'வாபி' பாடத்தில் இறுதியாண்டு படிக்கும் ஜபீர் மற்றும் 5-ம் ஆண்டு படிக்கும் முகம்மது பாசித் ஆகியோர் தான்.

முஸ்லிம் மாணவர்கள் முதல் 2 இடம்
ராமாயன வினாடி வினா போட்டியில் முஸ்லிம் மாணவர்கள் முதல் 2 இடங்களை பிடித்தது அங்குள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி பரவியதை அடுத்து பல தரப்பு மக்களும் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ராமாயண வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் ஜபீர் கூறுகையில், ''நான் சிறுவனாக இருந்ததில் இருந்தே, இதிகாசங்கள் பற்றி அறிந்திருந்தேன். குறிப்பாக முஸ்லிம் மதத்தை தாண்டி இந்து, பௌத்தம் உள்ளிட்ட மற்ற மதங்களை பற்றியும் ஆழமாக படிக்க தொடங்கினேன்.

அனைவரும் ராமாயனம் படிக்க வேண்டும்
குறிப்பாக வாபி பாடத்தில் சேர்ந்த பிறகு இதைப்பற்றி ஆழமாக படிக்க தொடங்கினேன். அந்த வகையில் ராமாயணமானது அனைத்து இந்தியர்களும் படிக்க வேண்டும். குறிப்பாக ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை அனைத்து இந்தியர்கள் படிக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் நாட்டின் கலாசாரம் குறித்தும் பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் ஒரு பகுதியாகும். ராமாயணத்தில் ராமன் தனது தந்தையான தசரருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தன் ராஜ்யத்தை துறந்து 14 ஆண்டுகள் சிறைவாசம் சென்றார்.

அனைத்து மதங்களும் அமைதியை. .
தந்தையின் சொல்லுக்காக ராஜ்யத்தை கூட துறந்த ராமனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோல ஒவ்வொரு மதமும் வெறுப்பை கற்று தருவதில்லை. அனைத்து மதங்களும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் மட்டுமே கற்று தருகிறது. இந்த வினாடி வினா போட்டி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்று கூறினார். மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் இவர்கள் பேசியிருப்பதாக பல்வேறு தரப்பினருக்கும் 2 மாணவர்களையும் பாராட்டி வருகின்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications