சினிமா ஆசையால் சீரழிந்த நடிகைகள்! தொழிலதிபர்களிடம் அனுப்பி காசு பார்த்த நடிகர்! பறந்த ”ரெட் கார்னர்”
திருவனந்தபுரம் : நடிகை மற்றும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சினிமாவில் வாய்ப்பு கேட்ட நடிகைகளை தொழிலதிபர்களிடம் அனுப்பி பாலியல் தொழில் செய்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது.
மலையாளத்தில் வெளியான சூர்யன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் பாபு, படங்களைத் தயாரித்து நடித்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
இந்நிலையில் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் தாயாரிக்கப்பட்ட படத்தில் நடத்த நடிகை ஒருவர் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நடிகர் மீது புகார்
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொச்சி போலீசில் நடிகை ஒருவர் தாயாரிப்பாளர் விஜய் பாபு மீது புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த ஒன்றரை மாதங்களாக விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக கூறியிருந்தார். மேலும் கற்பழிப்பு மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தவிர அவர் மது மற்றும் போதைப்பொருளை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என்றும் அந்த நடிகை கடுமையாக குற்றம் சாட்டினார்.

பாலியல் தொல்லை புகார்
பாலியல் புகாரோடு சேர்த்து பாதிக்கப்பட்ட நடிகையின் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட்டதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விஜய் பாபு மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் நடிகர் விஜய் பாபு தன்னிடம் அத்து மீறி நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும் தனக்கு ஒரு முத்தம் தருமாறு அவர் வற்புறுத்தியதாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மேலும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு விஜய் பாபு மீது பதிவு செய்யப்பட்டது.

நடிகர் விஜய் பாபு
வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நடிகர் விஜய் பாபுவை கைது செய்யும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தலைமறைவான விஜய் பாபுவுக்கு மேலும் பிடி இறுகியுள்ளது. உலக அளவில் குற்றவாளியாக அடையாளப்படுத்தும் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடுவதற்கு முன்னோடியாக, கேரள உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ரெட் கார்னர் நோட்டீஸ்
கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விஜய் பாபுவின் புகைப்படங்கள் மற்றும் அவர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விவரங்கள் வரும் நாட்களில் இன்டர்போல் இணையதளத்தில் வெளியிடப்படும். ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டவுடன் துபாய் காவல்துறை அந்த நடிகரை சட்டப்பூர்வமாக கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத வேறு நாடுகளுக்கு விஜய் பாபு தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளது.

ஓடீடியில் சிக்கல்
ரெட் கார்னர் அறிவிப்பை வெளியிட்டுள்ள காவல்துறையின் நடவடிக்கை காரணமாக விஜய் பாபு நடித்த அல்லது தயாரித்த படங்களின் OTT வெளியீட்டையும் பாதிக்கும். OTT தளங்கள் பொதுவாக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்புடைய படங்களை வாங்கவோ அல்லது திரையிடவோ அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் பல பெரிய படத் தயாரிப்பாளர்கள் கூட படத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். ஆனால் விஜய் பாபு ஒரே சமயத்தில் பல படங்களை தயாரித்து வந்தார். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இளம் பெண்களிடம் மோசடி
படத்தயாரிப்புக்கு இழுப்பதற்காக பல மோசடி வேலைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். விஜய் பாபுவிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு தினமும் ஏராளமான இளம்பெண்கள் வருவது உண்டு. இவர்களுக்கு நல்ல வாய்ப்பு தருவதாக ஆசை காட்டுவார். பின் அவர்களிடம் நைசாக பேசி தொழிலதிபர்களிடம் உல்லாசமாக இருக்க அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவர்களை படத்தயாரிப்பில் ஈடுபட வைத்துள்ளார். இதன் மூலம் பெருமளவு கருப்புப் பணத்தையும் சினிமா தயாரிப்புக்காக விஜய் பாபு பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக கொச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் விஜய் பாபுவிடம் ஏமாந்த இளம்பெண்கள் யார், யார் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications