ரூமுக்குள்.. டிரஸ் சேஞ்ச் செய்த பெண் திடீர் அலறல்.. அந்த "மூன்றாவது கண்".. ஸ்கேன் சென்டரில் அசிங்கம்
திருவனந்தபுரம்: ஸ்கேன் எடுக்க வந்த பெண், டிரஸ் மாற்ற அந்த ரூமுக்குள் சென்றபோதுதான், அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தார்.. என்ன நடந்தது?
நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை கேரளாவிலும் அதிகமாகிவிட்டது.. அதிலும் பெண்களே இதுபோன்ற குற்றங்களில் சில சமயங்களில் ஈடுபட்டு விடுவது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிலசமயம், அப்பாவி பெண்கள், காமக்கொடூரன்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாமல் சிக்கி சீரழிந்துவிடுகிறார்கள்.. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அங்கு பெருகி கொண்டிருக்கின்றன.
உறுப்பு வெந்து இறந்த பிஞ்சு.. காரணம்

ஸ்கேன் சென்டர்
இதோ இன்னொரு சம்பவம் நடந்துவிட்டது.. பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியில், தனியார் ஸ்கேன் மற்றும் லேப் ஒன்று இயங்கி வருகிறது.. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர், இந்த லேப்புக்குதான், ஸ்கேன் எடுக்க வந்து போவார்கள்.. அப்படித்தான் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக அங்கு சென்றிருக்கிறார்.. ஸ்கேன் எடுப்பதற்கு முன்பு அதற்கான பிரத்தியேக உடையை அணியவேண்டும் என்று அங்கிருந்த ஊழியர்கள் சொல்லி உள்ளார்கள்.

ஆன் கேமரா
அதனால், டிரஸ் மாற்றிக்கொள்ள, அங்குள்ள ஒரு ரூமுக்குள் இளம்பெண் சென்றிருக்கிறார்.. தன்னுடைய டிரஸ்ஸை மாற்றிவிட்டு, வேறு டிரஸ்ஸை அணிந்து கொண்டார்.. அப்போதுதான் அவர் தற்செயலாக அங்கு கவனித்தபோது, அங்குள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த டிரஸ்களுக்கு இடையே, ஒரு செல்போன் இருந்தது.. அந்த செல்போனில் லைட் எரிந்து கொண்டிருந்தது.. அதாவது செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்டு இருந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், செல்போனை எடுத்து பார்த்தார்.

டிரஸ் சேஞ்ச்
அப்போது, அவர் டிரஸ் மாற்றும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது... உடனே இந்த வீடியோவை, போனிலிருந்து அழித்து விட்டார்.. அந்த நேரம் பார்த்து, ரூமுக்குள் ஸ்கேன் சென்டர் ஊழியர் அன்ஜித் என்பவர் வந்துள்ளார்.. பெண்ணிடம் செல்போன் இருப்பதை பார்த்ததும் பதறிப்போனவர், அந்த செல்போனை அவரிடமிருந்து பறித்தார்.. அப்போதுதான், இளைஞரின் வண்டவாளம் தெரிந்து, அந்த பெண் கத்தி கூச்சலிட்டவாறே வெளியே ஓடிவந்தார்.. உடனடியாக அடூர் போலீசிலும் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்ஜித்தை கைது செய்து விசாரித்தனர்.

தலைசுற்றிய போலீஸ்
மேலும் அவரது செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தபோதுதான், அவர்களுக்கு தலைசுற்றிவிட்டது.. ஸ்கேன் எடுக்க வரும் பெண்கள், டிரஸ் மாற்றுவது எல்லாமே இந்த போனில் வீடியோவாக பதிவாகி இருந்தது.. பெண்கள் உடை மாற்றும் வீடியோ மட்டும் 20க்கும் மேல் இருந்ததாம்.. விசாரணைக்குப் பிறகு போலீசார் அன்ஜித்தை பத்தனம்திட்டா கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலிலும் அடைத்தனர்.. இந்த விஷயம் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வரை சென்றுவிட்டது.. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, இயக்குனருக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்..!!