உணர்வை தூண்டும் ஆடை அணிந்தால் பாலியல் வழக்கு நிற்காது.. சர்ச்சை நீதிபதி கிருஷ்ணகுமார் தூக்கியடிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் பெண்ணின் ஆடை பாலியல் உணர்வை தூண்டுவதாக உள்ளதாக கூறி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மாற்றுத்திறனாளி எழுத்தாளரான சிவிக் சந்திரனுக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிபதி கிருஷ்ணகுமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சிவிக் சந்திரன். 74 வயது நிரம்பிய இவர் மாற்றுத்திறனாளியாவார். எழுத்தாளரான இவர் சமூக செயற்பாட்டாளராக உள்ளார். இவர் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் சிவிக் சந்திரனுக்கு எதிராக சமீபத்தில் ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார். அதாவது, 2020 பிப்ரவரி 8ல் நந்தி கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் சிவிக் சந்திரன் தன்னை வலுக்கட்டாயப்படுத்தி தனது மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டி போலீசில் புகார் செய்தார்.

முன்ஜாமின் வழக்கு
இந்நிலையில் தான் தனக்கு முன்ஜாமீன் கோரி எழுத்தாளர் சவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட மற்றும் செசன்சு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவில் புகார் கூறிய பெண் அணிந்திருந்த படத்தை ஆதாரமாக இணைத்திருந்தார். இந்த முன்ஜாமீன் வழக்கை கோழிக்கோடு மாவட்ட மற்றும் செசன்சு நீதிபதி கிருஷ்ண குமார் விசாரித்தார்.

நீதிபதி கருத்து
அப்போது நீதிபதி கிருஷ்ணகுமார், ‛‛புகார் அளித்த பெண் அணிந்திருந்த ஆடை பாலியல் எண்ணத்தை தூண்டும் வகையில் இருந்துள்ளது. மேலும் 74 வயதான மாற்றுத் திறனாளி எழுத்தாளர் என்பதால் வலுக்கட்டாயமாக பெண்ணை மடியில் அமர வைத்து தொல்லை தந்துள்ளார் என கூறுவதை நம்பும் படியாக இல்லை. இதனால் பாலியல் வன்கொடுமை வழக்கின் பிரிவான சட்டப் பிரிவு 354-ஏ குற்றச்சாட்டுக்கு ஆளான எழுத்தாளருக்கு பொருந்தாது'' எனக்கூறி முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

வெடித்த சர்ச்சை
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பெண் ஒருவர் பாலியல் சீண்டல் தொடர்பாக புகார் அளித்த விஷயத்தில் அவரது ஆடை பாலியல் உணர்வை தூண்டுவதாக இருக்கிறது எனக்கூறி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி இருப்பதை பலர் கண்டித்தனர். மேலும் கேரளா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கிடையே கேரளா அரசு சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பணி இடமாற்றம்
இந்நிலையில் தான் சர்ச்சையை கிளப்பிய கோழிக்கோடு மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட் நீதிபதி கிருஷ்ணகுமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் கொல்லம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கேரள உயர்நீதிமன்றத்தின் ரிஜிஸ்டார் ஜெனரல் பி.கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் சர்ச்சையில் சிக்கிய நீதிபதி உள்பட மாவட்ட அளவிலான நீதிபதிகள் 3 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய சர்ச்சை
முன்னதாக புத்தக கண்காட்சியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலித் பெண் எழுத்தாளர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் அவருக்கு கடந்த 2ம் தேதி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.இந்த வழக்கையும் நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். அதில், ‛‛குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு சீர்த்திருத்தவாதி. அவர் தனது பெயருக்கு பின்னால் ஜாதியை குறிப்பிடுவது இல்லை. ஜாதியற்ற சமூகத்துக்காக எழுதி வருகிறார். இதனால் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவரை தொட்டு இருக்க வாய்ப்பில்லை'' என குறிப்பிட்டு முன்ஜாமின் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொடர் சர்ச்சைகளால் தான் தற்போது அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications