திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோனி டூ கிஷன்.. டாப் லிஸ்டில் ஜார்க்கண்ட்! ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் யார்?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி இருக்கும் நிலையில், இன்று கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெற உள்ளது. இதற்கிடையே முதல் ஐபிஎல் தொடர் முதல் கடந்த ஐபிஎல் வரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கும் பிசிசிஐ தயாராகி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் உணவகத்தில் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஏலத்தை ஹியூக் எட்மேட்ஸ் நடத்த உள்ளார்.

ஐபிஎல் சூதாட்டம்.. தோனி தொடர்ந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி.. ஐபிஎஸ் அதிகாரிக்கு சிக்கல்? ஐபிஎல் சூதாட்டம்.. தோனி தொடர்ந்த வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி.. ஐபிஎஸ் அதிகாரிக்கு சிக்கல்?

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஏலம்

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஏலம்

ஐபிஎல் போட்டிகளில் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பும், பார்வையாளர்களும் உள்ளார்களோ அதற்கு இணையாக ஐபிஎல் ஏலத்தை பார்க்கவும் ரசிகர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்தே வீரர்களை அணிகள் ஏலம் எடுத்து விளையாடி வருகின்றன. இதுவரை ஒவ்வொரு லீகிலும் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களை பார்ப்போம்.

 முதல் நபராக தோனி

முதல் நபராக தோனி

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை பெற்றார் மகேந்திர சிங் தோனி. முதல் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்றுகொடுத்து முழு ஃபார்மில் இருந்த தோனியை எடுக்க அப்போது அனைத்து அணிகள் போட்டியிட்டன.

2009 ஐபிஎல்

2009 ஐபிஎல்

எவ்வளவு விலை கொடுத்தாவது தோனியை வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.6 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது. இன்று வரை அவர் சென்னையிலேயே தக்க வைக்கப்பட்டு உள்ளது. அடுத்த நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர்கள் கெவின் பீட்டர்சன் பெங்களூரு அணிக்காகவும், ஆண்ட்ரீவ் ஃப்ளிண்டாஃப் சென்னை அணிக்காகவும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

2010 ஐபிஎல்

2010 ஐபிஎல்

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட அதிக விலைக்கு எந்த வீரரும் ஏலம் எடுக்கப்படவில்லை. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஷேக் பாண்ட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரன் பொல்லார்ட் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.3.42 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

கவுதம் கம்பீர், ஜடேஜா

கவுதம் கம்பீர், ஜடேஜா

2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியால் ரூ.11.4 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். இந்திய அணியின் ஆல்ரவுண்டராகவும் சென்னை அணியின் ஸ்டார் வீரருமான ரவீந்திர ஜடேஜா ரூ.9.72 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மேக்ஸ்வெல், யுவராஜ் சிங்

மேக்ஸ்வெல், யுவராஜ் சிங்

2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிளென் மேக்ஸ்வெல் ரூ.5.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டதே அதிகபட்ச தொகையாக இருந்தது. 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 2015 ஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங் தன்னுடைய சாதனையை முறியடித்து டெல்லி அணியால் 16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

வாட்சன், பென் ஸ்டோக்ஸ்

வாட்சன், பென் ஸ்டோக்ஸ்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான ஷேன் வாட்சன் சென்னை அணியால் 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.14.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. அவரே கடந்த 2018 ஐபிஎலில் ரூ.12.5 கோடி என்ற அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

பேட் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ்

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதிகபட்சமாக ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ரூ.15.5 கோடிகு ஏலத்தில் வாங்கப்பட்டார்.

 இஷான் கிஷன்

இஷான் கிஷன்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரும் ஆல் ரவுண்டருமான கிரிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 2022 வரை நடைபெற்ற மொத்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் இவர்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் இந்திய இளம் பேட்ஸ்மேண்ட் இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு மும்பை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

English summary
As preparations for this year's IPL cricket series are already underway, a mini auction is scheduled to be held in Kochi, Kerala today. Meanwhile, let's take a look at the list of highest bid players from the first IPL series to the last IPL.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X