ஊட்டி உல்லாடா..பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர்..தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சியான செய்தி சொன்ன மத்திய அரசு
டெல்லி: இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராம போட்டியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள உல்லாடா, புதுச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு உள்பட 35 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
இந்தியா என்பது ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாட்டை கொண்ட நாடு, ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு கலாச்சாரம், மொழி, பண்பாடு உள்ளது. இந்தியாவை போன்ற விசித்திரமான நாடு உலகத்திலேயே கிடையாது. பல மொழிகள், பல கலாச்சாரம் என்று இருந்தாலும் இந்தியா மிகவும் ஒற்றுமையான நாடாகவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கலாச்சாரம், பண்பாட்டை அறிந்து கொள்ளவும், இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களை ரசிக்கவும் பல வெளிநாட்டவர்கள் தினமும் விமானம் ஏறுகிறார்கள். அப்படி விமானம் ஏறுபவர்களின் வந்து சேரும் மாநிலம் என்றால், அது தமிழ்நாடு தான். தமிழ்நாடு தான் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்ப்பதில் முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் என்றால், அது மகாபலிபுரம், ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி, மதுரை, குற்றாலம், காரைக்குடி, காஞ்சிபுரம் போன்ற பல்வேறு இடங்கள் இருக்கின்றன. இது தவிர சிறிய கிராமங்கள் பல வித்தியாசமான நிலப்பரப்பு, கலாச்சாரம், வீடுகள் அமைப்பு போன்றவற்றால் புகழ் பெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய சுற்றுலா அமைச்சகம், இந்தியா முழுவதும் சிறந்த சுற்றுலா கிராமங்களை ஊக்குவிக்கும் விதமாக அண்மையில் போட்டியைத் நடத்தியத
கலாசார மற்றும் இயற்கை சொத்துக்களை பாதுகாக்கும் கிராமங்கள், சமூக அடிப்படையிலான மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் கிராமங்கள், பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் கிராமங்கள் என போன்ற தகுதிகளை நிர்ணயித்த மத்திய அரசு, அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மைக்கான தெளிவான அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரு சுற்றுலாத் தலத்தை சிறந்த முன்மாதிரியாகக் கொண்ட ஒரு கிராமத்தை கவுரவிப்பதற்காக இந்த போட்டியை நடத்தியது.
அதன்படி மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டு 2023-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது சிறந்த சுற்றுலா கிராம போட்டியில், இந்தியா முழுவதும் மொத்தம் 35 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள வேட்டைக்காரன்புதூர், நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள உல்லாடா ஆகிய கிராமங்களும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு கிராமமும், சிறந்த சுற்றுலா கிராமங்களாக வெண்கலப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் உல்லடா கிராமம் கடந்த ஆண்டு சிறந்த கிராமமாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட கிராமம் ஆகும். அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கான கேத்தி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் கிராமம் தான் உல்லாடா கிராமம். இங்கு கேத்தி ரயில் நிலையம், நீர்வீழ்ச்சி, பாறைகள் மற்றும் விவசாய நிலங்கள் இருக்கிறது. இந்த கிராமத்தில் அனைவரும் படுகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் முக்கிய சாகுபடி கேரட், பீன்ஸ், பீட்ரூட் மற்றும் தேயிலை போன்றவை ஆகும். உலகமே ஒரு நாளாவது வந்து வாழ விரும்பும் கிராமம் என்று நிச்சயம் உல்லடாவை சொல்லாம்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன் புதூரைபொறுத்தவரை அற்புதமான மரங்கள் சூழ்ந்த சாலையை கொண்ட பகுதி.. சுற்றிலும் ஆறுகளும்,தென்னை மரங்களும், பாரம்பரிய கட்டிடங்களும், புகழ் பெற்ற கோயில்களும், மெய்சிலிர்க்க வைத்துவிடும். இந்த கிராமத்தில் ஏராளமான சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளை என்று சொல்லாம். கிராம வாழ்க்கையை விரும்புவோர் ஒருமுறை இங்கு வந்தால் திரும்ப செல்ல மனமே வராது என்பது உறுதி. பொள்ளாச்சியின் அடையாளமாக திகழும் வேட்டைக்காரன் புதூர் பலருக்கு பிடித்த ஊராகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications