பிச்சு உதற போகும் மழை..இன்று முதல் ஒரு வாரத்துக்கு சம்பவம்! ரெடியா இருங்க.. வானிலை ஆய்வு மைய அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த வடகிழக்கு பருவமழை அவ்வளவாக கை கொடுக்காத நிலையில் இயல்பை விட மழை குறைவாகவே பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக குளிர் அதிகரித்திருந்த நிலையில், தற்போது மழை நிலை மீண்டும் உருவாகியுள்ளது. தெற்கு கேரளக் கடலோரத்தை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

அதேபோல், தென்கிழக்குப் பகுதியும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இந்த இரு காரணங்களால், இன்று (திங்கட்கிழமை) முதல் 10ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏற்கனவே லேசான மற்றும் மிதமான மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால், அந்த பகுதிகளில் காணப்பட்ட கடும் குளிர் சற்று குறைந்து, சற்று சீரான காலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், இன்று மற்றும் நாளை, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும். அதே சமயம் உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை தான் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டமும் உருவாகலாம்.
சென்னை வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications