கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்திலும் சில நாட்களில் தரமான சம்பவம் காத்திருக்கு!
டெல்லி: தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இன்னும் சில நாட்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை, அதன் பிறகு வடக்கு நோக்கி நகரும். இதனால் நாடு முழுக்க பரவலாக மழை பெய்யும்.

இந்தாண்டு மே 31ஆம் தேதி தென்கிழக்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்தச் சூழலில் ஒரு நாள் முன்னதாக இன்று வியாழக்கிழமையே கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ளது.
பருவமழை: இந்தியாவில் பொதுவாக ஜூன் முதல் செப். மாதம் வரை தென்மேற்கு பருவமழை இருக்கும். வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் இந்த பருவமழை மெல்ல வடக்கு நோக்கி நகரும். தொடர்ந்து ஜூலை இரண்டாவது வாரத்தில் நாடு முழுக்க பருவமழையைக் கொடுக்கும். இந்தாண்டு இன்று மே 30ஆம் தேதியே பருவமழை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில், "கேரளாவில் இப்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை இப்போது வடக்கு நோக்கி நகர்ந்து வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்குச் சென்று வருகிறது. இதனால் வடகிழக்கு பகுதிகளிலும் இப்போது பருவமழை தொடங்கியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
கேரளா: கேரளாவில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் நாட்டில் இயல்பைக் காட்டிலும் கூடுதல் மழை பெய்யும் என்றே இந்திய வானிலை மையம் கூறியிருந்தது. இந்தாண்டு நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை 106% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வானிலை மையம், "தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் நிலவுகிறது. தென் அரபிக்கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் மீதமுள்ள பகுதிகள், கொமோரின், லட்சத்தீவுகள், தென்மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது" என்று கூறியுள்ளது.
சென்னை வானிலை மையம்: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் கூட ஜூன் தொடக்கத்தில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம், "தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று ( 30-05-2024) துவங்கியது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், "ஜூன் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மழை இருக்கு: ஜூலை 3ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications