எல்டிடிஇ பற்றி இனி சம்பந்தன் பேசக்கூடாது!.... புலிகள் எச்சரிக்கை
கொழும்பு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இனி புலிகளைப் பற்றி பேசக்கூடாது. மீறிப் பேசினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்க பிரிவு ஒன்று எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், புலிகள் தங்களாகவே தங்களை அழித்துக் கொண்டார்கள் என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில், சம்பந்தனை மிகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் கடந்த வாரம், துரோகிகள் பட்டியலிலும் சம்பந்தன் இணைக்கப்பட்டார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கு சம்பந்தனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "இரா.சம்பந்தன் இனி விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி வாய் திறந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும், அவர் இந்தியா தவிர்ந்த எந்த ஒரு வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடை விதிக்கப்பட்ட விபரம், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியுடன் நெருக்கமாக கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் மூலமாக, இரா.சம்பந்தனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தெரியவருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications