8 இந்தியர்களுடன் ஈரான் கப்பலை தடுத்து வைத்த இலங்கை!
கொழும்பு: இலங்கை காலி துறைமுகத்தில் 8 இந்திய பணியாளர்களுடன் நிறுத்தப்பட்டிருந்த ஈரான் நாட்டு கப்பலை அந்நாட்டு அரசு தடுத்து வைத்துள்ளது.
எம்.வி. அமினா என்ற கப்பல் சீனாவிலிருந்து நவம்பர் 18-ந் தேதி புறப்பட்டு இலங்கையின் காலி துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலை தடுத்து வைக்குமாறு ஜெர்மன் வங்கி ஒன்று கேட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஜெர்மன் வங்கியிடமிருந்து 250 மில்லியன் யூரோவை கடனாக ஈரான் கப்பல் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆனால் கடனை வாங்கிய பிறகு பணத்தைக் கட்டாத ஈரான் நிறுவனம், கப்பலின் பெயரையும் மாற்றியிருக்கிறது. இதனால் கப்பலை தடுத்து வைக்குமாறு இலங்கையை ஜெர்மன் நாடு கேட்டுக் கொண்டது.
தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் 16 ஈரான் நாட்டவரும் 8 இந்தியரும் இருக்கின்றனர். இந்தியாஐச் ஏர்ந்த போசுன் யேசுராஜ் என்ற கப்பல் ஊழியர் இருதநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் கேப்டனால் அதே கப்பலில் இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுபற்றி இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்தியர்கள் மீட்கப்படுவர் என்று உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications