89 தமிழ் நகரங்களின் பெயர்களை சிங்களமயமாக்குகிறது இலங்கை அரசு .. தவிக்கும் ஈழத் தமிழர்கள்
கொழும்பு: ஈழத்தை முற்றிலும் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு ரகசியமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக தமிழ்ப் பெயர்களில் உள்ள நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளது. இதற்காக 89 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளது சிங்கள அரசு.
ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத்தை சிங்களர்கள் கைப்பற்றி முழுமையாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு குவிக்கப்பட்ட ராணுவத்தினர் இன்னும் போகவில்லை. தமிழர்கள் அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். அடுத்தவர் கையை ஏந்திப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒன்றுமில்லாமல் போய் விட்ட தமிழர்களை மேலும் கஷ்டப்படுத்தும் வகையில், தமிழ் நகரங்களின் பெயர்களையெல்லாம் சிங்களமயமாக்கும் முயற்சிகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 89 நகரங்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றவுள்ளனராம். கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அரசானது ஒரு ரகசிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது. இதன் அடிப்படையில் 89 தமிழ் நகரங்களுக்கு சிங்களப் பெயரைச் சூட்ட இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது.

வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கொட்டை
ஈழத் தமிழர்களின் மனங்களில் என்றும் பிரகசாமாக வீற்றிருப்பது வரலாற்றச் சிறப்பு வாய்ந்த வட்டுக்கோட்டை. அந்த நகரின் பெயரை சிங்களத்தில் பட்டகொட்ட என்று மாற்றப் போகிறார்களாம்.

பருத்தித்துறை பேதுருதொடுவ
அதேபோல தமிழர்களின் இன்னொரு முக்கிய நகரமான பருத்தித்துறையின் பெயரை பேதுருதொடுவ என்று மாற்றத் திட்டமிட்டுள்ளனராம். இதேபோல நைனாதீவு, நாகதீப என்று மாற்றப்படவுள்ளதாம்.

புலிகளின் கிளிநொச்சி இனி கரணிக
விடுதலைப் புலிகள் வரலாற்றில் முக்கிய இடம் வகித்த கிளிநொச்சி நகரின் பெயரை கரணிக என்று மாற்றவுள்ளனராம். அதேபோல முல்லைத்தீவின் பெயரை மோலடோவா என்று மாற்றவுள்ளனராம்.

இனி அம்மா கிடையாது... அம்மே?
விட்டால் இனி தமிழர்கள் தங்களது தாய்மார்களை அம்மா என்றுகூப்பிடக் கூடாது, சிங்களத்தில் அம்மே என்றுதான் கூப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டாலும் உத்தரவிடுவார்கள் போலத் தெரிகிறது.

தமிழை ஒழிக்கும் முயற்சி
ஈழம் என்பது தமிழர்களின் தாயகமே அல்ல என்று முற்றிலும் வரலாற்றைத் திருப்பி எழுதும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அதாவது தமிழ் என்ற ஒன்று ஈழத்தில் இருந்தது என்ற அடையாளமே இல்லாமல் செய்யும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
சிங்கள அரசின் இந்த தமிழ் துவேஷ நடவடிக்கையால் ஈழத் தமிழர்கள் பெரும் துயரத்திலும், அச்சத்திலும் மூழ்கியுள்ளனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications