உஷார்.. சேவை வரி உயர்வால் இவற்றின் கட்டணமெல்லாம் எகிறும்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடு முழுவதும் சேவை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் ஆம்னி பஸ்கள், கால் டாக்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
பட்ஜெட்டில் 12.36%ஆக இருந்த சேவை வரியை 14% ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்த சேவை வரி உயர்வு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து ரயில், விமானப் பயணம், வங்கிச் சேவை, காப்பீடு, விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டு, சுற்றுலாப் பயணம் உள்ளிட்டவற்றுக்கான செலவினங்கள் அதிகரிக்கவுள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஆகியவை "கூடுதல் சேவை வரி பிடிக்கப்படும்" என்பதை தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அறிவித்துள்ளன.

சேவை வரியால் உயரும் கட்டணங்கள்..
- அதாவது ரயில்களில் முதல் வகுப்பு, ஏசி வகுப்பு, சரக்கு கட்டணங்கள் மீதான சேவை வரி 0.5% உயர்கிறது. இந்த பிரிவில் 3.7% இருந்த வரி 4.2%ஆக உயர்ந்திருப்பதால் ஏசி பெட்டி கட்டணம் 5 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயரும்.
- போக்குவரத்துக்கும் சேவை வரி அமலுக்கு வருவதால் சரக்கு வாகனங்களுக்கான வாடகை உயருகிறது. இதனைத் தொடர்ந்து காய்கறி, உணவுப் பொருட்கள் விலையும் ஏறப் போகிறது. - ஆம்னி பஸ் மற்றும் கால் டாக்சிகளின் கட்டணமும் எகிறும்
- மொபைல் போன் கட்டணம், தொலைபேசி கட்டணங்களும் உயருகிறது.
- திருமண மண்டப வாடகை, வணிக வளாகங்களில் வாகனம் நிறுத்தும் கட்டணங்கள் அதிகரிக்கும்.
- நட்சத்திர ஹோட்டல்களில் உணவுப்பொருட்களுக்கான விலை உயரும். இதனால் பில்கள் இனி ஷாக்கடிக்கும்.
- ரியல் எஸ்டேட், கட்டுமான பணிகளுக்கும் சேவை வரி வருவதால் வீடு வாங்குவோர் கூடுதல் பணம் செலுத்த வேண்டி வரும்.
- விமான போக்குவரத்து, வங்கி, இன்சூரன்ஸ், விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டு சேவைக்கும் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications