சாலை கட்டுமானத்தில் ஊழல்.. கேள்வி கேட்ட சத்தீஸ்கர் நிருபர் கொலை.. உடல் செப்டிக் டேங்கில் வீச்சு
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சாலை கட்டுமான ஊழல் குறித்து கேள்வி கேட்டு செய்தி வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கேள்வி எழுப்பிய ஒப்பந்தாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் அவர் இறந்துள்ளதால் கொலை செய்யப்பட்டு உடல் செப்டிக் டேங்கில் வீசப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கரை சேர்ந்தவர் முகேஷ் சந்திரகர் (வயது 28). பத்திரிகையாளரான இவர் அந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர். அதாவது சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. இதனால் அடிக்கடி மாவோயிஸ்ட் தாக்குதலை நடத்துவார்கள்.

இந்நிலையில் தான் சத்தீஸ்கரில் மாவோயிட் மற்றும் அரசுக்கு இடையில் பழங்குடியினரின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி வந்தார். அதுமட்டுமின்றி கடந்த 2021ல் மாவோயிஸ்ட்டுகள் பிடித்து வைத்திருந்த சிஆர்பிஎப் கமாண்டோ ராகேஷ்வர் சிங்கை இவர் மீட்டு வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த புத்தாண்டு தினத்தில் திடீரென்று முகேஷ் சந்திரகர் மாயமானார். இதுதொடர்பாக அவரது சகோதரர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நேற்று முகேஷ் சந்திரகரின் உடல் பிஜப்பூர் டவுனில் உள்ள ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கில் கிடந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முகேஷ் சந்திரகர் பத்திரிகையாளரான இவர் சொந்தமாக யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் பிஜப்பூரில் சாலை கட்டுமான ஊழல் தொடர்பாக அவர் செய்தி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையடுத்து சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது, அவரை சந்திக்க சென்ற இடத்தில் தான் முகேஷ் சந்திரகர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதோடு ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரசேகரின் சகோதரர் தான் முகேஷ் சந்திரகரை கடந்த 1ம் தேதி சந்திக்க அழைத்துள்ளார். இருவரும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு சொந்தமான இடத்தில் சந்தித்துள்ளனர். அங்கு வைத்து தான் செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது தான் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications