மகா கும்பமேளா போறீங்களா.. தங்குவதற்கு IRCTC செய்த சிறப்பு ஏற்பாடு! உடனே புக் பண்ணுங்க
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் மகா கும்பமேளா வரும் 13ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பிரக்யராஜ் வரும் பக்தர்களுக்கு IRCTC 'கிராம் டென்ட் சிட்டியை' உருவாக்கியிருக்கிறது.
கும்பமேளா நடைபெறும் இடத்திலிருந்து வெறும் 3 கி.மீ தொலைவில் இந்த கூடாராத்தல் ஆன டென்ட் சிட்டி அமைந்திருப்பதால் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவுக்கு சுமார் 50-80 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் தங்குவதற்காக ஐஆரசிடிசி இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. திரிவேணி சங்கமத்திலிருந்து வெறும் 3.5 கிமீ தொலைவில், நைனி, செக்டார்-25 ஆரைல் சாலையில் இந்த டென்ட் சிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஐஆர்சிடிசியுடன் சேர்ந்து M/s லல்லூஜி & சன்ஸ் என்கிற தனியார் நிறுவனம் செய்திருக்கிறது.
கழிப்பறைகள், குளியல் அறை, குளிப்பதற்கு சூடான தண்ணீர், படுத்து உறங்குவதற்கு போர்வைகள், கை துண்டுகள் ஆகியவை இந்த குடிசையில் கிடைக்கும். தவிர டிவி வசதியும் இருக்கிறது. அதேபோல, சிசிடிவி கண்காணிப்பு இருப்பதால் கூடுதல் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து தெரிந்துக்கொள்ள 8076025236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்வதன் மூலமாகும் கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ள முடியும்.

எப்படி முன்பதிவு செய்வது?:
இதற்காக www.irctctourism.com/mahakumbhgram என்கிற இணைய முகவரிக்கு செல்லவும்
அதில் உங்கள் IRCTC ஐடி-யை லாக்-இன் செய்யவும்
ஒருவேளை உங்களிடம் IRCTC ஐடி இல்லையெனில், மொபைல் எண் அல்லது மெயில் ஐடியை வைத்து தற்காலிகமாக guest user-ல் லாக்-இன் செய்ய முடியும்.
லாக்-இன் செய்தவுடன் BOOK NOW என ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்
இதனையடுத்து தங்குமிடம் குறித்த விவரங்கள் கேட்கப்படும். அதை நிரப்ப வேண்டும். அதாவது எந்த தேதியில் தங்குகிறீர்கள், எப்போது காலி செய்கிறீர்கள், எத்தனை பேருடன் தங்குகிறீர்கள் உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.

பின்னர் நீங்கள் எந்த வகை கூடாரத்தில் தங்க விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். பட்ஜெட்டின் அடிப்படையில் டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் கூடாரங்கள் இருக்கும்.
இதனை தொடர்ந்து, தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும். அதாவது பெயர், முகவரி, மொபல் எண், மெயில் ஐடி, ஒருவேளை நீங்கள் மாற்று திறனாளியாக இருப்பின் அதையும் இந்த ஆப்ஷனில் குறிப்பிட வேண்டும்.

இதற்கடுத்து பணம் செலுத்தும் ஆப்ஷன் வரும். அதாவது டெபிட்/கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங், UPI அல்லது டிஜிட்டல் வாலட்கள் முறைகளில் பணம் செலுத்தலாம்.
கூடாரத்திற்கான கட்டணம் செலுத்தி முடிக்கப்பட்ட பிறகு, முன்பதிவு செய்யப்பட்டதற்கான மின்னஞ்சலை பெறுவீர்கள்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications