ஜார்கண்ட்டில் ஜெயிச்சே ஆகனும்.. நேராக களமிறங்கிய பிரதமர் மோடி.. இன்று 5 மணிநேரம் பிரமாண்ட ரோடு ஷோ
ராஞ்சி: ஜார்கண்ட்டில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று பிரமாண்டமாக ரோடு ஷோ நடத்துகிறார். ராஞ்சியில் தொடங்கும் இந்த ரோடு மொத்தம் 5 மணிநேரம் ரோடு ஷோ 3 கிலோமீட்டர் தொலைவுக்கு 5 மணிநேரம்வரை நடைபெற உள்ளது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்கண்ட்டில் தற்போது காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பொறுப்பு வகித்து வருகிறார்.

தற்போது ஜார்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஜார்கண்ட்டை பொறுத்தவரை மொத்தம் 2.6கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி வாக்காளர்கள் ஆண்கள். 1.29 கோடி வாக்காளர்கள் பெண்கள் ஆவார்கள்.இவர்களில் 11.84 லட்சம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்ககாளிக்க உள்ளனர். மொத்தமாக பார்த்தால் 66.84 லட்்சம் இளம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஜார்கண்ட்டில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மீண்டும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகள் உள்ளன. மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 62 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று பிரமாண்டமாக ரோடு ஷோ நடத்த உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ராஞ்சியில் உள்ள ரதூர் ரோட்டில் இருந்து இந்த ரோடு ஷோ தொடங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு 5 மணிநேரம் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராஞ்சி, ஹடியா, கன்கோ, ஹிஜ்ரி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளில் இந்த ரோடு ஷோ நடைபெற உள்ளது.மொத்தம் 2 லட்சம் பாஜகவினர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியையொட்டி கலாசார, பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அசாம் முதல்வரும், ஜார்கண்ட் பாஜக துணை பொறுப்பாளருமான ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‛‛இன்று நடக்கும் பிரதமர் மோடியின் ரோடு ஷோ வரலாற்றில் இடம்பிடிக்கும். இந்த ரோடு ஷோவில் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள்'' என்றார்.
அதேபோல் பிரதமர் மோடி வரும் நவம்பர் 13ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளை குறிவைத்து 2வது ரோடு ஷோ நடத்த உள்ளார். நவம்பர் 13ல் முதற்கட்டமாக தேர்தல் நடக்கும் வேளையில் இந்த 2வது ரோடு ஷோவிற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications