வசந்த பஞ்சமி..கும்பமேளாவில் நடந்த அதிசயம்! வானிலிருந்து கலர் கலராய்.. என்ன அது? அதிசயித்த பக்தர்கள்!
லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 8:00 மணி வரைக்குள்ளாகவே 62 லட்சம் பக்தர்கள் புனித நீராடிய நிலையில், வானில் இருந்து ஹெலிகாப்டர்கள் வண்ண வண்ண பூக்களை பக்தர்கள் மீது தூவிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை முப்பது கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் விசேஷம் மிகுந்த வசந்த பஞ்சமி இன்று கடைபிடிக்கப்படுகிறது மாதம் தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும் தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகிறது. இதில் கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி ஆகியவை பிரசித்தி பெற்றவை. ஆடி அமாவாசைக்கு பிறகு கருட பஞ்சமியும், ஆவணி மாதத்தில் வரும் பஞ்சமி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் வசந்த பஞ்சமி வழிபாடு குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் திரிவேணி சங்கமத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
உத்தரப்பிரதேச மாநில அரசு அதிகாரிகள் கூற்றுப்படி இன்று காலை 8 மணி வரையில் மட்டுமே சுமார் 62 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி இருக்கிறார்கள். மேலும் நேற்று வரை 34 கோடியே 97 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இதன் மூலம் தற்போது வரை சுமார் 36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.
இந்த நிலையில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு திருவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் உத்தர பிரதேசத்தில் வண்ண வண்ண பூக்கள் தூவப்பட்டுள்ளது. தற்போது அந்த காட்சிகளை உத்தர பிரதேச மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு இருக்கிறது.
#MahaKumbhMela2025 | Prayagraj: Flower petals showered on devotees taking a holy dip at Triveni Sangam on the occasion of Basant Panchami.
— ANI (@ANI) February 3, 2025
As per Uttar Pradesh Information Department, today over 62.25 lakh devotees have taken a holy dip by 8 am. More than 34.97 crore devotees… pic.twitter.com/JS2p1fnQCk
வசந்த பஞ்சமி அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து ,மஞ்சள் நிற பூக்கள் மூலம் பூஜை செய்வதும், பிள்ளையாரை மஞ்சளில் வைத்து பூஜிப்பதும், லட்டு உள்ளிட்ட மஞ்சள் நிற பதார்த்தங்களை படைப்பதும், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்குவதும் வசந்தத்தை கொண்டு வரும் என்பது ஐதீகம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications