மொத்தமாக 16 தையல்கள்.. மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவன்.. காரணத்தை கேட்டால், ஆடிப்போயிடுவீங்க
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் மதுரா போலீசார் துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?
உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் நாக்லா பூசான் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் விஷ்ணு.. திருமணமான விஷ்ணு, தன்னுடைய மனைவி, குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

விஷ்ணு பெரிதாக எந்த வேலைக்கும் போவதில்லை.. எந்நேரமும் மனைவியை திட்டிக் கொண்டே இருப்பாராம்.. காரணமே இல்லாமல், தினமும் தகராறு செய்வதையே வழக்கமாக வைத்திருப்பவராம்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி மாலையும் மனைவியிடம் தேவையில்லாமல் சண்டை போட்டுள்ளார்.. எப்போதுமே விஷ்ணு தகராறு செய்தால், பதிலுக்கு எதுவுமே பேசமாட்டாராம் மனைவி. ஆனால் அன்றைய தினம் ஓயாமல் தன்னை திட்டி கொண்டிருந்த கணவனிடம், "கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க" என்றாராம்.
மோசமான தாக்குதல்: இதைக்கேட்டதுமே விஷ்ணுவுக்கு கோபம் வந்துவிட்டது. தன்னையே எதிர்த்து பேசுகிறாயா? என்று கேட்டு, மனைவியை சரமாரியாக தாக்கியிருக்கிறார்.. இதைத்தடுக்க வந்த தன்னுடைய சகோதரியையும் விஷ்ணு மோசமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியும் விஷ்ணுவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.. அதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் மனைவியின் உதட்டை கடித்து குதறிவிட்டார்..
இதனால் வலியால், அந்த பெண் அலறி துடித்தார்.. அவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. வாயிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்து பதறிப்போய், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் அனுமதித்தனர்.. அங்கு அப்பெண்ணுக்கு உதட்டில் மொத்தம் 16 தையல்கள் போடப்பட்டன.
வாக்குமூலம்: இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில், மருத்துவமனைக்கே நேரடியாக விரைந்த போலீசார், பெண்ணிடம் நடந்த விவரங்களை கேட்டனர்.. ஆனால், அந்த பெண்ணால் பேச முடியாத நிலைமை இருந்தது..அதனால், தனக்கு நேர்ந்த அவலங்களை ஒரு பேப்பரில், கண்ணீர் மல்க எழுதிக் காட்டியிருக்கிறார்.
இதையே வாக்குமூலமாக எடுத்துக் கொண்டு, போலீசார் விஷ்ணுவின் வீட்டுக்கு விரைந்தனர்.. ஆனால், விஷ்ணு மாயமாகிவிட்டார்.. விஷ்ணு, அவரின் சகோதரர், விஷ்ணுவின் அம்மா என 3 பேருமே வீட்டில் காணவில்லையாம்.. தற்போது தலைமறைவாக இருப்பதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி மோகித் தோமர் சொல்லும்போது, "கடந்த வெள்ளிக்கிழமை, அந்த பெண் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டிற்கு வந்த கணவர் விஷ்ணு காரணமின்றி தகராறு செய்துள்ளார்.. அமைதியாக இருக்கும்படி கூறிய அப்பெண்ணை அவர் அடிக்கத் தொடங்கிவிட்டார்.
அப்போது, திடீரென பெண்ணின் உதட்டைக் கடித்ததால் ரத்தம் கொட்டியிருக்கிறது. அதை தடுக்க வந்த தன்னுடைய தங்கையையும் விஷ்ணு அடித்துள்ளார். தன்னுடைய கணவரின் செயல் குறித்து, மாமியாரிடமும் மைத்துனரிடமும் முறையிட்டிருக்கிறார். ஆனால் அவர்களும் சேர்ந்து தன்னை திட்டி, அடித்து உத்துவிட்டார்கள்" என்று பாதிக்கப்பட்ட புகாரில் எங்களிடம் தெரிவித்துள்ளார். தலைமறைவாகியிருக்கும் 3 பேரையும் தேடி வருகிறோம் என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications