அதிகாலையில் குலுங்கிய பிலிப்பைன்ஸ்.. சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் திடீரென இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6 ரிக்டரில் பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குக் கடந்த வாரம் தான் இரு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 12 கோடி தான். இது ரிங் ஆஃப் பையர் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 4:33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு 90 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பதறியபடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது காயங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் எந்தளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் தான் தெற்கு பிலிப்பைன்ஸில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு ஓரே வாரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. அப்போது அக்டோபர் 10ம் தேதி மிண்டனாவோ பிராந்தியத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது..
முதல் நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவில் பதிவானது. அதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு, 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்த இரண்டு நிலநடுக்கங்களும் மிண்டனாவோவின் கிழக்குப் பகுதியிலிருந்து செல்லும் பிலிப்பைன்ஸ் டிரெச் (Philippine Trench) என்ற முக்கிய கடலடி பிளவுப் பாதையின் அசைவால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது..
அந்த இந்த இரண்டு நிலநடுக்கங்களும் தாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மணாய் நகருக்கு அருகில், கடலுக்கு அடியில் சுமார் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனத்தின் (PHIVOLCS) தலைவர் டெரெசிட்டோ பாகோல்கோல் கூறியிருந்தார்.
பிலிப்பைன்ஸை பொறுத்தவரை அது பசிபிக் ரிங்க ஆஃப் பையர் என்ற பகுதியில் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது. ஏங்கு ஏற்படும் டெக்டோனிக் தகடுகளின் நகர்வுகள் காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications