இனி நடக்கிறதே வேற.. ஆப்கானிஸ்தான் தலைவலிக்கு நடுவே இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தளபதி அடாவடி பேச்சு
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டு மழை பொழிந்து அடாவடி செய்யும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் வார்த்தைகளுடன் அடாவடியாக பேசியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனிர், அணுசக்தி மயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை. எனினும், எந்தவொரு தாக்குதல் நடவடிக்கைக்கும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் மோதல் வெடித்துள்ளது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இத் தாலிபான்கள் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வந்த நிலையில், கடந்த வாரம் காபூலில் வான்வழி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல்
இதனால் கோபம் அடைந்த ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாக தாலிபான்கள் கூறினர். இந்த மோதலால் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
48 மணி நேர சண்டை நிறுத்தம் தற்போது அமலாகியிருந்தாலும், ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, ஆப்கானிஸ்தானை இந்தியா தூண்டிவிடுகிறது என்ற ரீதியில் பாகிஸ்தான் தலைவர்கள் அபமாநகரமாக பேசிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அணு ஆயுத மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.
பெரிய அளவிலான பதிலடி கிடைக்கும்
பாகிஸ்தான் ராணுவத் தளபதி கைபர் பக்துன்க்வாவின் அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசியபோது அவர் கூறியது:- "அணுசக்தி மயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடம் இல்லை. எனினும், சிறிதளவு ஆத்திரமூட்டும் செயல்கள் நடந்தாலும் பாகிஸ்தானிடம் இருந்து தீர்க்கமான மற்றும் பெரிய அளவிலான பதிலடி கிடைக்கும்.
பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு
இந்தியாவுடனான 4 நாள் மோதலின்போது வெளியிலிருந்து பாகிஸ்தான் ஆதரவைப் பெற்றதாகக் கூறுவது தவறான கருத்து ஆகும். எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது. வார்த்தைகளால் வற்புறுத்த முடியாது. இந்தியாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு இருக்கிறோம். நமது ஆயுதப்படைகள் தொலைநோக்கு திறன்களை காட்டியுள்ளன.
பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. பயங்கரவாதிகளால் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச விதிகளின்படி தீர்வு காண வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடாகும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவோம்" என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர்
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹால்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்தது.
பாகிஸ்தானின் அடாவடி செயல்
இதனால் இந்தியாவில் எல்லையோர பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த அடாவடி செயலை இந்தியா, தனது வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் தடைசெய்து மூழ்கடித்தது. இந்தியாவின் உறுதியான பதிலடியால் சரிந்த பாகிஸ்தான், இந்தியாவிடம் சண்டை நிறுத்தம் செய்ய கேட்டுக்கொண்டது.
இதன்பிறகே இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டை முடிவுக்கு வந்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்தாலும், இந்தியாவை சுட்டிக்காட்டும் வகையில் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளிப்படுத்துவது பாகிஸ்தான் தலைவர்களின் வழக்கமான நடைதான். அந்த வகையில்தான் தற்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியும் கடுமையாக பேசியுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications