காப்பாத்துங்க.. சவுதி - கத்தாரிடம் கதறும் பாகிஸ்தான்.. எல்லையில் மீண்டும் ஓடவிடும் தாலிபான்கள்
காபூல்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தாலிபான்களும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடும் சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 58 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தான் மீண்டும் எல்லையில் இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. மீண்டும் பாகிஸ்தானை தாலிபான்கள் ஓடவிட்டு அடித்தனர். ராணுவ வீரர்கள், பொதுமக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான் தங்களை காப்பாற்றும்படி கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிடம் உதவி கோரியுள்ளது. இது இருநாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஆண்டு தொடக்கம் முதலே இருநாடுகள் இடையே எல்லையில் பிரச்சனை வெடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினர் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையேயான பிரச்சனையால் மோதல் அவ்வப்போது நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி கொண்டு வரப்பட்டது போல் பாகிஸ்தானிலும் ஷரியா சட்டத்தின்படி நடக்கும் ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது தான் டிடிபி அமைப்பின் நோக்கமாகும். இதனால் தான் பாகிஸ்தான் - டிடிபி இடையே எல்லையில் பயங்கர சண்டை நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ராணுவ வீரர்களை கொன்றனர். அதன்பிறகு ராணுவ செக்போஸ்ட்டுகளை சிதைத்தனர்.
இதற்கு சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். டிடிபி அமைப்பினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. டிடிபி தாலிபான் தலைவர்களை குறிவைத்து நடத்ப்பட்ட தாக்குதலில் 10க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதனை ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு கடுமையாக கண்டித்தது. ஆப்கானிஸ்தானின் பொறுமையை சோதிக்க வேண்டாம். எங்களுடன் விளையாட வேண்டாம். மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆப்கானிஸ்தான் அரசு வார்னிங் செய்தது.
அதன்பிறகு தாலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராக்கெட் குண்டுகளையும் வீசினர். பாகிஸ்தான் தரப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர். இதில் 30க்கும் அதிகமானவர்கள் ராணுவ வீரர்கள் ஆவார்கள். இதனால் இருநாடுகள் இடயே போர் பதற்றம் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
கத்தாரும் சவுதி அரேபியாவும் நேரடியாக தலையிட்டு இருதரப்பையும் சமாதானம் செய்து சண்டையை முடித்து வைத்தன. இதையடுத்து எல்லையில் கடந்த 2 நாட்களாக அமைதி நிலவி வந்தது. இதற்கிடையே தான் நேற்று இரவு மீண்டும் சண்டை வெடித்து விட்டது. தாலிபான் ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தின.
ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் இருநாடுகளின் எல்லையில் இந்த துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. எல்லையில் அமைதி நிலவி வந்த நிலையில் திடீரென்று துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. யார் முதலில் துப்பாக்கியால் சுட்டனர்? என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தானும், ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானும் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 12க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 100 பேர் வரை காயமடைந்துள்னர். இதனை ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி தொடர்பாளர் ஜபிஉல்லா முஜாகித் உறுதி செய்துள்ளார்.
ஜபிஉல்லா முஜாகித் கூறுகையில், ‛‛எல்லையில் அமைதி நிலவி வந்தது. ஆனால் இன்று அதிகாலையில் திடீரென்று பாகிஸ்தான் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. டேங்கிகளால் குண்டுகள் வீசப்பட்டது. கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது. 12 பொதுமக்கள் இறந்துள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவம் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் ஏராளமாக கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வீரர்களின் ஆயுதங்கள் டாங்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இதன்மூலம் தாலிபான் ராணுவம் நடத்திய பதிலடியில் கொத்து கொத்தாக பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். செர்பியாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய ராட்சத டாங்கியையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதன்பிறகு அந்த டாங்கியில் அவர்கள் உலா வரும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மேலும் தாலிபான் ராணுவம் பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடியை தொடர்வோம். இது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் மீண்டும் கத்தார், சவுதி அரேபியாவிடம் உதவி கோரியுள்ளது. எங்களை எப்படியாவது மீண்டும் காப்பாற்றுங்கள் என்று பாகிஸ்தான், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிடம் கதறி உள்ளது. இருப்பினும் தற்போது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இருநாட்டு படையினரும் உஷார் நிலையில் உள்ளனர். இதனால் போர் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications