பாக்., ராணுவத்தின் பேண்ட்டை உருவிய தாலிபான்கள்.. போர் நிறுத்தத்துக்கு நடுவே வெற்றி ஊர்வலம்
காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி ஷெல் தாக்குதல், துப்பாக்கிச்சண்டை போட்டனர். இதில் பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் பலியாகினர். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதையடுத்து கத்தார், சவுதி அரேபியா தலையீடு செய்து 48 மணிநேரம் சண்டையை நிறுத்தி உள்ளது. இதற்கிடையே வெற்றியை காட்டும் வகையில் பாகிஸ்தான் வீரர்களின் ராணுவ உடைகளை கையில் ஏந்தி தாலிபான்கள் ஊர்வலமாக சென்ற நிலையில் அதன் பின்னணி குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஆண்டு தொடக்கம் முதலே இருநாடுகள் இடையே எல்லையில் பிரச்சனை வெடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் டிடிபி எனும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அவ்வப்போது எல்லையில் மோதி கொள்கின்றனர்.

இந்நிலையில் தான் டிடிபி தாலிபான் தலைவர்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதில் 10க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதனை ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு கடுமையாக கண்டித்தது. எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலால் ஆப்கானிஸ்தான் கடும் கோபமடைந்தது. பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து தாலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராக்கெட் குண்டுகளையும் வீசினர். பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு கத்தார், சவுதி அரேபியா தலையிட்டு மோதலை முடித்து வைத்தது. ஆனால் இது ரொம்ப காலம் நீடிக்கவில்லை. இன்று அதிகாலையில்
தாலிபான் ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு, ஷெல் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் இருநாடுகளின் எல்லையில் இந்த மோதல் வலுத்தது.
பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அதேபோல் ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானி்ன் அவுட் போஸ்ட், டாங்கி, துப்பாக்கி உள்ளிட்டவற்றை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் இருநாடுகளிடமும் பேசியது. உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தாக்குதலை நிறுத்தினர். முன்னதாக 48 மணிநேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களின் உடைமைகளை கைவிட்டு ஓடினர். இதனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் துப்பாக்கி, ராணுவ உடைகள், டாங்கியை தாலிபான்கள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ டாங்கியில் தாலிபான்கள் வலம் வந்தனர். அதேபோல் கைகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உடைகளை ஏந்தி கார்கள் மீது நின்று தாலிபான்கள் ஊர்வலம் சென்றனர். பாகிஸ்தான் உடனான மோதலில் வெற்றியை குறிக்கும் வகையிலும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முதுகை காட்டி உயிருக்கு பயந்து எஸ்கேப் ஆனதை உலகுக்கு தெரிவிக்கும் வகையிலும் இந்த ஊர்வலத்தை அவர்கள் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் தாத் ஜூன்பிஸ் கூறுகையில், ‛‛பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விட்டு சென்ற பேண்ட்டுகளை தாலிபான்கள் கைப்பற்றி கிழக்கு நாங்கிரஹர் மாகாணத்தில் ஊர்வலம் செல்கின்றனர்'' என கூறியுள்ளார்.
இதுபற்றி கந்தகாரில் வசிக்கும் மொஹிபுல்லா கூறுகையில்,‛‛தேவைப்பட்டால், நாங்கள் முஜாகீதின்களாக இஸ்லாமிக் எமிரேட் ராணுவத்தில் (ஆப்கன் ராணுவம்) இணைந்து போர்க்களத்தில் நுழைவோம்'' என்றார். அதேபோல் பைதுல்லா பகுதியை சேர்ந்த பக்டியா என்பவர் கூறுகையில், ‛‛ஆப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை கொடுத்துள்ளது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு எதிராக ஓரணியில் இருக்கிறோம்'' என்றார்.
காபூலை சேர்ந்த பெரிஸ்டா கூறுகையில், ‛‛நாங்கள் எப்போதும் எங்களின் ஆயுத படைக்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் எங்களின் நிலத்தை பாதுகாக்க போராடி வருகின்றனர். எப்போதும் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம்'' என்று கூறியுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications