பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம்


கொச்சி: பிரபல நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 45.

பிரபல நடிகர் கலாபவன் மணி கல்லீரல் பிரச்சனை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடியில் பிறந்தவர் கலாபவன் மணி. 1995ம் ஆண்டு அவர் மலையாள திரையுலகில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நகைச்சுவை, வில்லன் என பலவகை கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர் பல குரல்களில் பேசும் வல்லமை வாய்ந்தவர். பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். தமிழில் பாபநாசம், எந்திரன், ஜெமினி, அன்னியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது, கேரள அரசு விருதுகளை வாங்கியவர் மணி. சாலக்குடியில் ஆட்டோ ஓட்டிய மணி மலையாள மொழியில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார். அவருக்கு நிம்மி என்ற மனைவியும், ஸ்ரீலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Actor Kalabhavan Mani passed away at a private hospital in Kochi on sunday.