பவதாரிணி விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைக்க காரணமே இதுதான்! குட்டி பத்மினி உடைத்த ரகசியம்
சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி சமீபத்தில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய இறப்பு ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆனாலும் சில தினங்கள் கடந்து விட்ட பிறகும் பவதாரிணியை பற்றிய பேச்சு இணையத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இன்று கூட பவதாரிணி கடைசியாக எடுத்த புகைப்படங்களை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.
இப்படியான நிலையில்தான் நடிகை குட்டி பத்மினி பவதாரிணி குறித்து சில தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் பவதாரிணி உடல்நிலை மோசமாகிவிட்டது என்பதை தெரிந்து இருந்தும் அது பற்றி வெளியே சொல்லாமல் அவருடைய குடும்பத்தினர் மறைத்ததற்கான காரணம் என்ன என்பது பற்றி குட்டி பத்மினி பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பவதாரிணி வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்தாலும் தன்னுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்டுவதற்கு ரொம்பவே போராடி இருக்கிறார். ஆரம்பத்தில் இளையராஜா பவதாரிணி பாடுவதற்கு சம்மதிக்காமல் இருந்த நிலையில் பிறகு தன்னுடைய மகளின் திறமையை பார்த்து அவரே சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் பாடிய பவதாரிணி எந்த இடத்திலும் தான் ஒரு பிரபலத்தின் மகள் என்ற பிகு பண்ணாமல் எளிமையின் ரூபமாக தான் இருந்தார் என்று அவரோடு பழகிய அனைவருமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில்தான் அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வயிறு வலி அடிக்கடி வந்திருந்த போதிலும் அதை அலட்சியமாக விட்டிருந்த நிலையில் பவதாரிணிக்கு நான்காவது கட்டத்தில் புற்றுநோய் இருக்கும்போதுதான் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அது தெரிய வந்திருக்கிறது. இந்த அதிர்ச்சியான செய்தியால் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தாலும் இந்த செய்தியை வெளியே யாருக்குமே சொல்லாமல் தான் இருந்திருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பே யுவன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானிடம் தன்னுடைய அக்கா நிலை குறித்து பேசி இருந்ததாகவும், அதற்கு ஏ ஆர் ரகுமான் சில அறிவுரைகளை கூறியதாகவும் கூட சொல்லப்படுகிறது. ஆனால் இது ரசிகர்களுக்கோ செய்தி சேனல்களுக்கு இந்த செய்தி தெரியாமல் இருந்திருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி வெளிப்படையாக நடிகை குட்டி பத்மினி பேசியிருக்கிறார்.

அதில் இந்த கஷ்டமான விஷயத்தை பற்றி வெளியே தெரிந்தால் ஒரு சிலர் ஐயோ இப்படி ஆகிவிட்டது என்று பரிதாபப்படுவார்கள். ஆனால் பலர் இது இவர்களுக்கு தேவை தான், இப்படித்தான் ஆகும் என்றெல்லாம் வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசுவார்கள். அந்த மாதிரி எல்லாம் எதற்கு பேச வேண்டும்? என்றுதான் இளையராஜா குடும்பத்தினர் இதை வெளியே சொல்லாமல் மறைத்திருக்கிறார்கள்.

ஆனால் பவதாரிணியின் விஷயம் இளையராஜாவுக்கு கூட தெரியுமா என்ன என்பது உறுதியாக தெரியவில்லை என்று குட்டி பத்மினி பேசியிருக்கிறார். அதோடு பவதாரிணி ரொம்பவே எளிமையான பொண்ணு. எந்த இடத்திலும் சிரிச்ச முகமாக இருப்பார். ஆனால் அதிகமாக பேச மாட்டார். அப்படிப்பட்ட ஒரு பொண்ணுக்கு இந்த நிலைமை வந்திருக்கவே கூடாது. ஆனால் ஒரே ஒரு ஆறுதல் செய்தி நான் கேள்விப்பட்டது என்னவென்றால் பவதாரிணியின் கடைசி காலத்தில் அவருடைய கணவர் அவர் கூட தான் இருந்தார் என்று சிலர் சொல்கிறார்கள்.
அது எனக்கு கொஞ்சம் மாறுதலை கொடுத்திருக்கிறது. பவதாரணிக்கு ஆரம்பத்தில் அவருடைய கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்தாலும் கடைசி நேரத்தில் அவருடைய கணவராவது அவருடன் இருந்தாரு. அதுவே கொஞ்சம் ஆறுதல் கொடுத்திருக்கும் என்றும் அந்த பேட்டியில் குட்டி பத்மினி பேசியிருக்கிறார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications