பழனிச்சாமியிடம் திருமணம் பற்றி பேசும் பாக்கியா..அதிர்ச்சியில் கோபி.. இனி நடக்கப்போவது இதுதான்..!
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஜூன் 7ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரைக்கும் ஆன பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா பழனிச்சாமி இடம் போன் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.
பாக்யா பழனிச்சாமியை தன்னுடைய உறவுக்கார பெண் ஒருத்தரை வீட்டில் வந்து பெண் பார்க்கும் படி போனில் பேசியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த வாரம் நடைபெற்றிருக்கிறது. ராதிகாவை ஈஸ்வரி வீட்டை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதால் ராதிகாவின் அம்மா போலீஸோடு வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்கிறார்.
போலீஸ்காரர்களும் கோபி விவாகரத்து செய்துவிட்டு தான் முறைப்படி ராதிகாவை திருமணம் செய்திருக்கிறார். அதனால் இனி ராதிகா இங்கே தான் இருப்பார் என்று கூறிவிட்டு சென்றிருக்கின்றார். அதோடு இனி ராதிகாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னால் மொத்த குடும்பத்தையும் உள்ளே தூக்கி வைத்து விடுவேன் என்று மிரட்டி விட்டு போயிருக்கின்றனர்.

பாக்யாவை கோபி விவாகரத்து செய்து விட்டதால் அவர் எப்படி இந்த வீட்டில் இருக்க முடியும் என்றும் போலீஸ் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு ஈஸ்வரி பாக்கியா தான் எங்க மருமகள் அவள் இந்த வீட்டில் தான் இருப்பாள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பழனிச்சாமிக்கு போன் பண்ணுன பாக்கியா, சார் எங்க மாமாவோட சொந்தக்கார பொண்ணு ஊர்ல இருந்து வந்திருக்காங்க. வந்து நீங்க பொண்ணு பாக்குறீங்க சரியா? என்று சொல்ல, அதற்கு பழனிசாமி அதிர்ச்சியாக, சார் எந்த வயசுலனாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஏன் சார் நாம ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாது
நீங்க பொண்ணு பாக்க வரீங்க, கல்யாணம் பண்றீங்க என்று மிரட்டலாக பாக்யா பேசிக்கொண்டு போவதை கேட்டு அடிப்பாவி என்று அதிர்ச்சி ஆகி இதை மட்டும் யாரும் கேட்க மாட்டீங்களா டா என்று புலம்பியபடி மாடிக்கு வர அங்கே இனியா மீது மோதி விட பார்க்கிறார்.

பிறகு இனியாவிடம் என்ன வீட்டை டெக்கரேட் பண்ணிட்டு இருக்காங்க? என்று கேட்க, பழனிச்சாமி அங்கிள் நம்ம வீட்டுக்கு பொண்ணு பார்க்க வராங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியின் உச்சத்தில் போய் நிற்கிறார். இந்த நிலையில் இதை வைத்து கோபி பிரச்சனை செய்ய இருக்கிற இருக்கிறாரா? அல்லது அவமானப்பட இருக்கிறாரா? என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications