Captain Prabhakaran 4th day Box Office: ரீ-ரிலீஸிலும் கேப்டன் பிரபாகரன் கிங்! - 4 நாட்களில் இத்தனை கோடி வசூல்!
சென்னை: (Captain Prabhakaran 4th day Box Office) மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', ரீ-ரிலீஸிலும் வசூலை வாரிக் குவித்து, பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 1991-ல் வெளியான இந்தப் படம், திரையிட்ட இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வெற்றி பெற்று, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்தது. ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் 100-வது படங்கள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையில், விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வெள்ளி விழா படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நான்காவது நாள் வசூல் பற்றி பார்க்கலாம்.

படைப்பின் பின்னணி
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியின் கைவண்ணத்தில் உருவான இந்தப் படத்தில், வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லனாகச் சித்தரித்து, அதில் நடிகர் மன்சூர் அலிகானை அறிமுகப்படுத்தினார். பக்கா ஆக்சன் காட்சிகளும், அசத்தலான வசனங்களும் நிறைந்த இந்தத் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இன்றுவரை கருதப்படுகிறது.
ரீ-ரிலீஸ் வசூல் சாதனை
கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த ரீ-ரிலீஸிலும் படம் அமோகமான வசூலைக் குவித்து வருகிறது.
கேப்டன் பிரபாகரன் வசூல் நிலவரம்
முதல் நாள்: ₹42 லட்சம், இரண்டாம் நாள்: ₹86 லட்சம்,மூன்றாம் நாள்: ₹1.3 கோடி, நான்காம் நாள்: ₹1.96 கோடி இவ்வாறு, படம் வெளியான நான்கு நாட்களில் மட்டும் மொத்தமாக ₹4.54 கோடியை வசூல் செய்து, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரையரங்கு காட்சிகளின் அதிகரிப்பு
ஆரம்பத்தில் சில திரையரங்குகளில் ஒரு காட்சி அல்லது இரண்டு காட்சிகளாக மட்டுமே வெளியிடப்பட்ட 'கேப்டன் பிரபாகரன்', ரசிகர்களின் அமோக வரவேற்பைக் கண்டு, தற்போது நான்கு காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், விஜயகாந்த் தனது அசைக்க முடியாத ரசிகர் பட்டாளம் மூலம் ரீ-ரிலீஸிலும் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.
ஆர்.கே. செல்வமணியின் கடின உழைப்பு
'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் தற்போது 'கூலி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 400 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுவே படக்குழுவினருக்கு பெரிய வெற்றி என்று செல்வமணி கூறினார். "இந்தப் படம் வெளியான போது விஜயகாந்தின் 100வது படம் என்பதால் சென்டிமென்டாக ஓடாது என்று சிலர் சொன்னார்கள். அது போலவே நான் விஜயகாந்துடன் இணைந்த இரண்டாவது படம் என்பதாலும் ஓடாது என்று சிலர் கூறினர். ஆனால் அனைத்தையும் முறியடித்து இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது" என்று செல்வமணி கூறினார்.
சரிகமப பவித்ரா என் அக்கா தான்! நெகிழ வைத்த சண்முக பாண்டியன்.. விஜயகாந்த் சாகல! கலங்க வைத்த காட்சி
இந்த படம் எடுத்த காலகட்டத்தில் எந்த ஒரு வசதியும் கிடையாது CG, ட்ரோன் கேமரா என்று எந்த வசதியும் கிடையாது. ஒரு காட்சியில் 2000 பேர் நடிக்க வேண்டும் என்றால் அந்த காட்சி எடுப்பதற்காக 2000 பேரையும் நேரில் அழைத்து வரவேண்டும். அப்படி இந்த படத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிக்கும் நாங்கள் அதிகமாக சிரமப்பட்டு இருந்தோம்.
விஜயகாந்த் சார், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் மற்றும் எங்களுடன் பணியாற்றிய டெக்னீசியன்கள் என எல்லோருமே கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து படம் எடுத்து முடித்தோம். இந்த படம் எடுக்கும்போது இரண்டு, மூன்று பேர் உயிரை கூட இழந்து இருக்கிறார்கள். ஏன் விஜயகாந்த் சார் கூட இரண்டு மூன்று முறை மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தார்.
என்று ஆர் கே செல்வமணி பேசி இருந்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications