குடும்ப ரகசியத்தை உடைத்த கங்கை அமரன்.. பவதாரிணி ஒரு குழந்தை.. கடைசி நேரத்தில் நடந்தது இதுதான்!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த மாதத்தில் மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் பவதாரணியின் மரணம் குறித்து முதல் முறையாக கங்கை அமரன் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதிலும் பவதாரிணியின் கடைசி காலத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி எமோஷனலாக கங்கை அமரன் பேசி இருக்கிறார்.
அதில் புற்றுநோய் பாதித்து மூன்றாவது கட்டத்தில் இருந்த பவதாரிணிக்கு நோய் பாதித்தது குறித்து சொல்லாமலேயே குடும்பத்தினர் மறைத்த விஷயத்தை பற்றியும் அதில் கங்கை அமரன் பேசி இருக்கிறார்.

பொதுவாக இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். அது சாதாரண குடிசையில் வாழும் மக்களின் வீட்டில் வந்தாலும் சரி அரண்மனையில் வாழும் பிரபலங்கள் வீட்டில் வந்தாலும் சரி ஒருவருடைய இறப்பு அவருடைய குடும்பத்தையும் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தி விடும். ஆனால் காலம் போகப் போக மெல்ல மெல்ல அந்த இறப்பின் வலி மனதில் இருந்து குறைய தொடங்கி அவர்களோடு இருந்து இனிமையான நினைவுகள் தான் அனைவருடைய மனதிலும் இருக்க வேண்டும்.
காரணம் நேற்று அவர்கள் என்றால் என்று நாம் என்கிற கதையில்தான் உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த மாதிரி தான் சமீபத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணியின் மறைவு அவருடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
காரணம் 47 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பவதாரிணிக்கு அவருடைய கடைசி கட்டத்தில் தான் அவருக்கு புற்று நோய் பாதிக்கப்பட்ட விஷயமே தெரிந்திருக்கிறது. இளையராஜா வீட்டில் செல்ல பிள்ளையாக இருந்த பவதாரிணின் கடைசி காலத்தில் பற்றி அவருடைய சித்தப்பாவான கங்கை அமரன் மனம் திறந்து இருக்கிறார். அதில் பவதாரணியின் இறப்பு எங்களுக்கு பெரிய இழப்பு.
அந்த பொண்ணு வீட்டில் அதிர்ந்து கூட பேசாது. ரொம்பவும் செல்லமான பொண்ணு. எல்லோரிடமும் பாசம் மிகவும் இருக்கும். அவளுக்கு எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறது தான் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி எனக்கு போன் பண்ணி பேசுவா ஆனா பவதாரணிக்கு ஆரம்பத்தில் வயிறு வலி வரும்போது அவருடைய புருஷன் சபரி மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் இருக்கிறார். அப்போ குறிப்பிட்ட ஒரு இடத்தில் வயிறு வலிக்கிறது என்று சொல்ல அந்த டாக்டர் அந்த இடத்தை பார்த்து உடனே அவருக்கு மருந்து கொடுத்திருக்கிறார்.
அது கொஞ்சம் நாளைக்கு சரியாகி இருக்கிறது. ஆனால் பிரச்சனை வேறு விதமாக இருந்தது அப்போது யாருக்குமே தெரியாது பிறகு மூன்றாவது கட்டத்தில் இருக்கும் போது எங்களுக்கு தெரிய வந்தது. அதைக் கேட்டு குடும்பத்தினர் அழுது கொண்டிருந்தோம். ஆனால் அந்த விஷயத்தை பவுத்தாவிடம் சொல்லவே இல்லை. கடைசி ஒரு வாரத்தில் அவளுக்கு வயிறு வலி அதிகமாக ஆன பிறகுதான் உண்மையை சொன்னோம்.
அப்பகூட மீண்டும் வந்துருவா என்ற நம்பிக்கையில் தான் நாங்களும் இருந்தோம் அவளும் இருந்தா பவதாரிணிக்கு கல்யாணம் முடிந்து 47 வயசு ஆனாலும் அவ எங்களுக்கு குழந்தைதான். வீட்டுக்கு ரொம்பவும் செல்லமான பொண்ணு அவ பாடிய பாடல் எல்லோருக்குமே பிடிக்கும் ஆனால் இப்போ அவ இல்லாம போன பிறகு பலரும் இன்னும் கொஞ்சம் பவதாரிணி பாடி இருக்கலாம் ஒரு சில பாடல்கள் மட்டும் தானே பாடி இருக்காங்கன்னு சொல்றாங்க...
ஆனா பவதாரிணி இருக்கும்போது யாருமே இதை சொல்லல, நாங்களும் இப்ப ரொம்பவே வருத்தப்படுறோம், பவதாரிணி இன்னும் கொஞ்சம் பாடல் பாடி இருக்கலாம்னு எங்களுக்கும் தோணுது. அதுபோல பவதாரிணி பாடியதில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லுவாங்க ஆனால் எனக்கு அந்த பாடல் பெரிய அளவில் பிடிக்காது.
காரணம் அந்த பாடலில் அவளுடைய குரல் ரொம்பவும் சின்ன பிள்ளைத்தனமா இருக்கும் ஆனால் அதற்குப் பிறகு அவள் பல பாடல்கள் பாடி இருக்கா அது எனக்கு ரொம்பவே பிடிக்கும். நாங்க எங்க வீட்டு குழந்தையை இழந்துட்டோம் ஆனாலும் சிலர் இந்த நேரத்திலும் தப்பு தப்பா இந்த இறப்பு பற்றி செய்தி போடறாங்க. அது மேலும் எங்களை கஷ்டப்படுத்துகிறது என்று அந்த பேட்டியில் கங்கை அமரன் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications