Pandian Stores: குமாரிடம் ராஜி சொன்ன விஷயம்; குழப்பம் ஏற்படுத்தும் சித்தப்பா, பாண்டியன் கடைக்கு வந்த மயில்!
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இன்றைய எபிசோட் (ஆகஸ்ட் 21) பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிறது. குமார், ராஜி, மயில் என ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு புதிய மாற்றம் ஏற்படுவது போல் கதை நகர்கிறது.

குமாரின் மனக்குழப்பம்
இன்றைய எபிசோடி ஆரம்பத்தில், குமார் தன்னுடைய வீட்டு திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கிறார் அவரை தேடி வந்த அம்மா இங்கே படுத்திருப்பது பற்றி குழம்பிக் கொண்டிருக்கிறார். அதை எதிர் வீட்டில் இருக்கும் ராஜியும் மீனாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ராஜு தன்னுடைய அண்ணன் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது குமாரி நம்ம வடிவு குமாரை அழைத்து உடல்நலம் சரியில்லையா என்று கேட்கிறார். குமாரின் சோகத்தைக் கண்டு வருந்திய அவர் அத்தையிடம், "இவன் ஏன் இப்படி இருக்கிறான்?" என்று கேட்கிறார். அதற்கு அத்தை "அவன் சரியாகிவிடுவான்" என்று ஆறுதல் சொல்கிறார்.
ராஜியின் முயற்சி
ராஜி குமாரின் நிலையைப் பார்த்து கவலைப்படுகிறார். மீனா அவரிடம், "அண்ணனை நினைத்து ஃபீல் பண்ணுகிறாயா?" என்று கேட்கிறார். அதற்கு ராஜி, "அவன் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது" எங்க அண்ணனுடைய நிலைமைக்கு நானும் ஒரு காரணம். அதுபோல அவனுடைய நிலைமைக்கு எங்க குடும்பத்தினர் தான் காரணம். அவன் ஆரம்பத்திலேயே செய்யும் சின்ன சின்ன தப்புயையும் அவங்க தண்டிக்காம விட்டதால் அவன் எவ்வளவு மோசமான செயல்களை செய்ய தொடங்கி விட்டான். அவனை அப்பவே தண்டித்திருக்க வேண்டும் என்று வருத்தத்தோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
பழிவாங்கும் எண்ணம்
அடுத்ததாக ராஜ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில் எதிரே குமார் நடந்து வருகிறார் குமாரை பார்த்ததும் ராஜி அவரிடம் சென்று, நீ இன்னும் என் மேல கோபத்தில் தான் இருக்கிறியா அந்த கதிர் எனக்கு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணல ஆனாலும் அவன் என்ன நல்லபடியா வச்சிக்கிறான் "எதற்காக பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உன் வாழ்க்கையை ஏன் வீணடிக்கிறாய்?" என்று கேட்கிறார். குமார் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
சின்ன வயசுல இருந்து எனக்காக பார்த்து பார்த்து பல விஷயங்களை பண்ணி இருக்கிற. எனக்காக உன் பாசத்தை எல்லாம் கொட்டி வளர்த்த ஆனால் இப்போ நான் சொல்ற விஷயத்தை நீ கேட்கிறாயா என்ற கூட எனக்கு தெரியல. நீ அரசியை லவ் பண்ணி இருக்க, கல்யாணம் முடிச்சு நல்லபடியா வாழ்ந்திருக்கலாம். ஆனா உன்னுடைய வாழ்க்கையை நீ கெடுத்துகிட்ட என்று ராஜி சொல்லி கொண்டு இருக்கும்போது குமாரின் அப்பா வந்து நீ நாடகம் போட்டுக்கிட்டு இருக்கியா? இப்படி நடிக்க உன் மாமனார் சொல்லி அனுப்பினானா என்று திட்டி குமாரை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போகிறார்.
மயிலின் கண்ணீர்
அடுத்ததாக கிச்சனில் பெயர் எல்லோரும் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். அப்போது தங்கமயில் அங்கு சோகமாக இருக்கிறார் கோமதி மயிலைப் பார்த்து, "இனி எல்லாரும் எங்க குழந்தையை காணோம் என்று கேட்கப் போகிறார்கள்" என்று சொல்கிறார். இதைக் கேட்டு மயில் அழுதுகொண்டே அங்கிருந்து செல்கிறார். மீனா கோமதியைப் பார்த்து, "ஏன் அத்தை இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்?" என்று கேட்கிறார்.
அடுத்த கட்டம் என்ன
ராஜி குமாரை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சக்திவேல், "நீயும் இவளுடன் திருட்டுத்தனமாகப் பேசுகிறாயா?" என்று குமாரைக் கேட்கிறார். அதுபோல வீட்டிற்கு வந்த மயில் நடந்த எல்லாவற்றையும் சொல்லி அழுகிறார். மயிலின் அம்மா சரவணன் எப்படியாவது தனது வழிக்கு கொண்டு வரும்படி சொல்கிறார். பின்னர் மயில் பாண்டியனின் கடைக்குச் சென்று நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications