For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜூன் 10, 2001

மழை பெய்கிறது.
ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே
நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள்., ஈரத்திலேயே
நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்: ஈரத்திலேயே
சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக்கூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜுரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள், மிஞ்சியிருக்கும்
மூடர் விதிவசம் என்கிறார்கள்.
ஆமடா, விதிவசந்தான்.
அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை என்பது ஈசனுடைய
விதி.
சாஸ்தரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லைல உண்மையான சாஸ்த்ரங்களை
வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ்
நாட்டுப் பார்ப்பார் பொய்க்கதைகளை மூடரிடங் காட்டி
வயிறு பிழைத்து வருகிறார்கள்.
குளிர்ந்த காற்றாையா விஷமென்று நினைக்கிறாய்?
அது அமிழ்தம். நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன்
குடியிருப்பாயானால்,
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X