For Daily Alerts
Just In
குமரியில் திருக்குறள் திருவிழா-தமிழ் அமைப்புகள் பங்கேற்பு
கன்னியாகுமரி: தமிழ் அமைப்புகள் சார்பில் கன்னியாக்குமரியில் திருக்குறள் திருவிழா நடந்தது.
கன்னியாகுமரியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் திருக்குறள் திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கன்னியாகுமரி சங்கிலிதுறை கடற்கரையில் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று கூடி திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வைத்தார். பின்னர் தமிழ் ஆர்வலர்கள் கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து விவேகானந்தபுரத்தில் உள்ள கேந்திர அவைக் கூடத்தில் திருக்குறள் திருவிழா கருத்தரங்கம் நடைபெற்றது.