For Daily Alerts
Just In
மும்பையில் திருவள்ளுவர் சிலை
நவி மும்பை தமிழ்ச் சங்கமும், விஜிபி உலக தமிழ்ச் சங்கமும் இணைந்து திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவையும், திருக்குறள் மாநாட்டையும் ஜூன் 21,22ம் தேதிகளில் நடத்துகின்றன.
இது குறித்து நவி மும்பை தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிர்வாகி ராஜகோபால், செயலாளர் மகாதேவன், விஜிபி உலக தமிழ்ச் சங்க தலைவர் சந்தோஷம் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,
உலகம் முழுவதும் திருக்குறள் நெறி பரப்பவும், திருவள்ளுவர் புகழ் ஓங்கவும், இதுவரை தென்னாப்பிரிக்கா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் ரிஷிகேஷிலும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இப்பொழுது நவி மும்பையிலும் திருவள்ளுவர் சிலை அமைக்க உள்ளோம்.
ஜூன் 21, 22 ஆம் தேதிகளில் நவி மும்பையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவும், திருக்குறள் மாநாடும் நடக்கும் என்றனர்.