For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரேபியர்களை கவர்ந்த தமிழக கரகாட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Karaham

துபாய்: அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு மற்றும் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் தேசிய விருது பெற்ற ரமேஷின் கரகாட்டம் அரேபியர்களை பெருமளவு கவர்ந்திழுத்தது.

அஜ்மான் ஜுவல் பேலஸில் நடத்திய பக்ரீத், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய விழாக்களையொட்டி அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மூர்த்தி வரவேற்க சிறப்பு விருந்தினர்களாக ஷேக் காலித் பின் சயீத் அல் நுயமி, முஹம்மது அப்துல்லாஹ் அல்வான், சுல்தான் அப்துல்லாஹ் ராஷித் அல் மத்ரூஸி உள்ளிட்ட அஜ்மான் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சென்னை உலக நட்புறவுக் கழகத்தின் சார்பில் இலக்கிய சாதனையாளர் விருது கவிஞர் பா. இராமலிங்கத்துக்கும், மருத்துவ சேவைக்கான விருது குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் சாக்கோட்டை க. அன்பழகனுக்கும்,

கல்விப் பணிக்காக நவநீதகிருஷ்ணன் மற்றும் சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜன், அண்டா டிராவல்ஸ் ஜெய்னுலாபுதீன், சென்னை டாக்டர் பி. தங்கராஜ், டாக்டர் சுந்தரம், பாபு தாமஸ் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் வாழ்த்துரை வழங்கிய க. அன்பழகன் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னியச் செலவாணியை அனுப்பி முக்கியப் பங்காற்றி வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களே முக்கிய காரணம் என்றார்.

ஈடிஏ ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் சென்னை சங்கமத்தில் இருப்பது போன்ற உணர்வை இவ்விழா ஏற்படுதியதாக குறிப்பிட்டார். தமிழர்களின் உயர்வுக்கு காரணமாக இருந்து வரும் அஜ்மான் ஷேக்கைப் பாராட்டினார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனராஜ் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஜ்மான் மூர்த்தியுடன் இணைந்து அவர்களது குடும்பத்திற்கு உதவித் தொகையை வழங்கினார்.

அஜ்மான் இந்திய சங்க பொதுச்செயலாளர் அஹ்மத் கான், மன்னார்குடி சமூக சேவகர் கே. மலர்வேந்தன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல் இசை நிகழ்ச்சி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை ஆர்ப்பரிக்க வைப்பதாய் அமைந்திருந்தது.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாய் முப்பெரும் விழா அமைந்திருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X