இருதய அறுவைச் சிகிச்சை - உதவி கோரும் ஏழைப் பெண்
சென்னை: இருதய அறுவைச் சிகிச்சைக்கு பண உதவி கோரி நிற்கிறார் ஏழைப் பெண் ஒருவர்.
இந்தப் பெண்ணின் கணவர் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர் ஆவார். சென்னையில், பொம்மைக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும், ஒரே மகனும் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
மாதம் ரூ. 2500 மட்டுமே சம்பளமாக பெறும் இவர், தனது சம்பளத்தை வைத்துக் கொண்டு தன்னையும், ஊரில் உள்ள தனது மனைவி, மகனையும் கவனித்துக் கொள்ள தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில் அவரது மனைவியின் இதயத்தில் துளை ஏற்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் அவரால், இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள போதிய பண வசதி இல்லை.
இந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 21ம் தேத அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தப் பெண்ணுக்கு உதவ நினைப்போர் உதவ முன்வரலாம். இது ரம்ஜான் காலம். எனவே ரம்ஜான் தானம் செய்ய விரும்புவோர் இந்தப் பெண்ணின் மருத்துவ செலவுகளுக்காக உதவ முன்வர வேண்டும் என்று இந்தப் பெண்ணுக்காக மருத்துவ நிதியுதவி கோரியுள்ள நஜ்முதீன் தெரிவித்துள்ளார்.
நஜ்முதீனை 0091 9442381310 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.