For Daily Alerts
Just In
தேங்காயில் காந்தி உருவம்- கோபி ஆசிரியர் மன்சூர் அலி சாதனை
கோபி: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் உருவத்தை தேங்காயில் வரைந்து கோபியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி சாதனை படைத்துள்ளார்.
கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மன்சூர் அலி (40).
இவர் கடந்த காலங்களில் நவதானியங்களால் காந்தியடிகள் உருவம் மற்றும் ஹேராம் என்ற வார்த்தைகளை கொண்ட ஓவியம் வரைந்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி கடந்த 2007 -ம் ஆண்டு கலைத்துறையில் கலை சுடர்மணி என்ற விருதை வழங்கி தமிழக அரசு இவரை கவுரவித்தது
இவர், தற்போது தேங்காயில் காந்தியடிகள் உருவத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார். இவரது இந்த முயற்சிக்கு சக ஆசிரியர்களும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.